‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி!

udhayanidhi-blueஉதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜேஷ் எம் ,தன் உதவி இயக்குநரை இயக்குநராக்கிய உதயநிதிக்கு நன்றி கூறினார்.

“படம் ஆரம்பித்ததும் கூட எனக்கு பயம் பதற்றம் ஜெகதிஷ் எப்படி படப்பிடிப்பில் பணியாற்றுகிறார் என்று கேமராமேனிடம் கேட்டேன் .அவர் நாலு பட அனுபவசாலி போல வேலைபார்க்கிறார் என்றார் எனக்கு நிம்மதியாக இருந்தது. உயர்ந்த உள்ளம் கொண்ட உதயநிதியை நான்தான் நாயகனாக அறிமுகப் படுத்தினேன் என்பதில் பெருமைப் படுகிறேன்.” என்றார்.

கேயார் பேசும் போது ” சூர்யா, ஆர்யா எல்லாப் ஜிம் போய் உடம்பை மாற்றுகிறார்கள் உதய நிதி எப்போதும் ஸ்லிம்மாக இருக்கிறாரே எப்படி? “என்றார்.

சூர்யா பேசும் போது ”வசதி மட்டும் இருந்தால் சினிமாவில் வந்து விட முடியாது ; வசதி மட்டும் இருந்தால் நடித்து விட முடியாது. ஈடுபாடு ஆர்வம். உழைப்பு எல்லாம் வேண்டும். எல்லாமும் பாஸ் உதயநிதியிடம் இருக்கிறது.பாடல் காட்சிகளில் நயன்தாரா அழகாக இருக்கிறார்” என்றார்.

உதயநிதி பேசும்போது ” இது ஒண்ணும் சொல்லாத கதை இல்லை. சாதாரண கதைதான். ஆனால் உங்களுக்கு பிடிக்கும். இந்தப் படத்துக்காக எல்லாரும் உழைத்து இருக்கிறார்கள. ‘ஐ’ படத்து ஆடியோ விழாவுக்கே போகாத சந்தானம் இங்கு வந்துள்ளார்.” என்றார்.

விழாவில் இயக்குநர் ஜெகதிஷ், ஆர்யா, சந்தானம் ஆகியோரும் பேசினார்கள்.