நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு

vcguga1நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும் என்று பாடல்கள்  வெளியீட்டுவிழாவில்  வி.சி. குகநாதன் பேசினார்.

 புதுமுகங்கள் நடிக்க புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் –   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து    தயாரிக்கும் படம்  ‘இஞ்சி முறப்பா’. சகா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில்  ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும்  ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா  , சிரி, ரகு  ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘இஞ்சி முறப்பா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று நடந்தது.

பாடல்களை வெளியிட்டு இயக்குநர் வி.சி. குகநாதன் ‘இஞ்சி முறப்பா’ போல சற்றுக்காரமாகவே  பேசினார்.அவர் பேசும் போது

“இந்தப் படத்தின் பாடல் காட்சிகளைப் பார்க்குப் போது காட்சிகள் ஆந்திராவில் எடுக்கப் பட்டதை பார்த்தோம். இந்த ‘இஞ்சி முறப்பா’ வில் கோங்குரா வாடை வீசியது. அதனால் தவறில்லை. கோங்குரா வாடை வரட்டும் நல்லது .விறுவிறுப்பாகவே இருக்கும்.

நான் தடுக்கி விழுந்தபோது கை கொடுத்தது தெலுங்குத் திரையுலகம்தான்.
எனக்கு தமிழில் வாய்ப்பு குறைந்த போது தெலுங்கு திரையுலகம் வாய்ப்பு கொடுத்தது .ராமாநாயுடு கூப்பிட்டுவாய்ப்பு கொடுத்தார். நான் தெலுங்கில் பண்ணிய 69 படங்களில் 41 படங்கள் ராமாநாயுடுவுக்கு செய்தேன். ராமாராவ், சிரஞ்சீவி, கிருஷ்ணா எல்லாரையும் வைத்து படம் செய்திருக்கிறேன்.

நான் ஒரு டிவியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இப்போதெல்லாம் மீடியாக்கள் மூத்தவர்களை மதிப்பதில்லை அனுபவசாலிகளை மதிப்பதில்லை என்றார்கள். அது தவறு. மூத்தவர்களுக்கு என்றும் மரியாதை உள்ளது. யாஷ் சோப்ரா ‘தில்வாலியே …’படம் இயக்கிய போது அவருக்கு வயது 70 தாண்டிவிட்டது. அது போல்தான் ராகவேந்திரராவும். வயதுக்கும் படைப்புக்கும் சம்பந்தம் இல்லை.

இந்தப்படப் பாடல்கள் ஆந்திரா பிலிம் சிட்டியில் எடுக்கப் பட்டுள்ளது. வெறும் பாறை மலை என்று இருந்த இடத்தில் ஜூபிளி ஹில்ஸில் அங்கு பிலிம் சிட்டி உருவாக்கி பிரமாண்டமான ஸ்டுடியோக்கள். அமைத்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கு முன்பே வந்த தமிழ்த்திரையுலகில் சரியான திரைப்பட நகரம் இன்னமும் இல்லை.  நானெல்லாம் ஆந்திராபோய் தெலுங்குப் படம் செய்தபின் எனக்குப்  பிறகு அமைக்கப்பட்டதுதான் ஜூபிளி ஹில்ஸ் திரைப்பட நகரம்.

நாமும் அதுபோல் உருவாக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் சேர்ந்து ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி பையனுரில் அமைக்கத் திட்டமிட்டோம் ஏனோ இன்னும் ஆரம்பிக்கப் படாமல் இருக்கிறது.

ஆந்திர பிலிம்சிட்டியில் எடுக்கப் பட்டுள்ள இந்தப் படக் காட்சிகளைப் பார்த்த பிறகாவது நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும். “என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார். injimurappaaaudiolaunch2gp