‘நம்பியார்’ விமர்சனம்

DSC_9057 ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம்,ஜெயப்பிரகாஷ்,  வனிதா,  சுப்பு பஞ்சு,  தேவதர்ஷினி நடித்துள்ளனர்.

எல்லாருக்குள்ளும் நல்ல குணம், கெட்டகுணம் இரண்டும் இருக்கும் .மனிதத் தன்மையும் மிருகத்தன்மையும் கலந்தே இருக்கும். கெட்டதை விடுத்து நல்லதை தேர்வு செய்வதில்தான் ஒருவரது குணச்சித்திரம் முடிவு செய்யப் படுகிறது.

ஸ்ரீகாந்துக்குள் எம்.ஜி.ஆர் குணமும் நம்பியார் குணமும் இருக்கிறது.குடும்பத்தின் அழுத்தத்தால் ஸ்ரீகாந்துக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. நல்லவராக இருக்கும்போது யாரும் மதிப்பதில்லை எதுவும் நடப்பதில்லை. எனவே தனக்குள் இருக்கும் நம்பியாரை அதாவது தீயசக்தியை வெளியே விட்டால் என்ன நடக்கிறது என  பார்க்கிறார்.

அவ்வப்போது அவருக்குள் இருக்கும் சைத்தான் வெளியே எட்டிப் பார்ப்பார். அவருக்கு இல்லாத பொல்லாத யோசனையெல்லாம் சொல்லிக் கொடுத்து அவரது மனதை  திசைமாற்றிச் சிதைத்துக் கொண்டிருக்கிறது அந்த சைத்தான்.

இது வித்தியாசமான கற்பனைதான் ஆனால் உளவியல் ரீதியாக அழகாகக் சொல்லியிருக்க வேண்டிய கதையை மலிவான காட்சிகளால் மலினமாக்கிவிட்டார். இயக்குநர். பெரும்பாலான  காட்சிகளில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் நல்லவராகவும் கெட்டவராகவும் இருவேறு முகம் காட்டியுள்ளார். நடிக்க நல்ல வாய்ப்புதான் இருந்தாலும் அதிகம் குடித்துவிட்டு போடும் ஆட்டம் வெறுப்பூட்டுகிறது குடிக்காமல் ஒருவன் கெட்டவன் ஆக முடியாதா?

சுனைனா அளவான நடிப்பு. நம்பியார் சக்தியாக வரும் சந்தானம் நல்ல கற்பனைதான் ஆனால் மிகையாக காட்டி அலுப்பூட்டி இருக்கிறார்கள்.

திரைக்கதையை முறையாக சித்தரித்திருந்தால் இந்த நம்பியார் ,எம்.ஜி.ஆர் அளவுக்கு உயர்ந்திருப்பார்.