நம் கலாச்சாரம் பேசும் படமாக மேல்நாட்டு மருமகன் !

melnattumarumagan2கலாச்சாரத்துக்கும்  நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதைச்சொல்லும் படம்தான்  “மேல்நாட்டு மருமகன்”.

ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்நாடு. எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார்..இந்தப் படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆண்ட்ரீயன் அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ் ராகவன் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு  –  கெளதம்கிருஷ்ணா

இசை    –  வி.கிஷோர் குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  எம்.எஸ்.எஸ்

படம் பற்றி இயக்குநர் எம்.எஸ்,எஸ் அவர்களிடம் கேட்டோம்…

”ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும்  நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.

கலாச்சாரம் கலந்த படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் படமாக்கி இருக்கிறோம்.

நம் கலாச்சாரத்தை மதிக்கிறவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

வருகிற பிப்ரவரி மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது” என்றார் இயக்குநர்.