நயன்தாரா ஆவாரா சானியாதாரா?

saniyatara3வெளி வர இருக்கும் படங்களில் பெரிதும் எதிர்பார்க்க படும் படம் ‘ஜிகினா’. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த  படத்தில்  நடித்து உள்ளார்  சானியா தாரா.சமூக வலைத்தளங்களில் ஏற்படும் காதலைப் பற்றியும் , அதன் வாயிலாக ஏற்படும் சிக்கலையும் விவரமாக சொல்லும் ‘ஜிகினா’ இந்த வார இறுதியில் வெளியாகிறது. உயரத்திலும் தோற்றத்திலும் நயன்தாராவை நினைவு  படுத்தும் இந்தப் படத்தின் நாயகி சானியா தாரா ‘ஜிகினா” படத்தைப் பற்றிக் கூறும் போது’   நான் இதற்கு  முன்னர் ஓரிரு படங்களில் நடித்து இருந்தாலும் ‘ஜிகினா’ படம் மூலம் ஒளி வீச காத்து இருக்கிறேன். லிங்கு சாமி சார் வெளியிட உள்ள படம் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.’ஜிகினா’ இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான படமாகும்.

நான் இந்தப் படத்தில் ஒரு கோரஸ் பாடகியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் இனிமையானவை. இப்பவே செம்ம ஹிட் . நான் எப்பவும்  ‘ஜிகினா’ பாடல்களை பாடியவாறே இருக்கிறேன். எனக்கு நயன்தாரா என்றால் கொள்ளை பிரியம்.   இன்றைக்கும்  ரசிகர்களை  தன கட்டுக்குள் வைத்து இருக்கும்  அவரை போலவே  இருக்கவும், நடிக்கவும் ஆசை . இந்தப் படத்தில் கூட ஒரு காட்சியில் நான் காரில் இருந்து  தள்ளி விடப் பட்டு கீழே விழும் காட்சியில் நடித்தேன், முதலில் பயந்தாலும், பில்லா படத்தில் நயன்தாரா நடிக்கும் சண்டைக் காட்சிகளை மனதில் நினைத்து தான் நடித்தேன்.எனக்கு நடிப்பு சொல்லி தருவதில் கதா நாயகன் விஜய் வசந்த் சாரும் , இயக்குநர் ரவி நந்தா பெரியசாமியும் பெரிதும் உதவினர்.’ஜிகினா’ படம் face book உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  ஏற்படும் உறவுகளை விமர்சித்தாலும் , என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் இங்கிருந்து தான் உதயம் ” என்று பளிச்செனக் கூறினார் சானியா தாரா.