சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

19.12

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வியாழன் காலை திருவள்ளுவர்திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மத்தியஅமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி, துணைசபாநாயகர் குரியன் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்களும், அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்துகொண்டார்கள் .தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும்போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவமாணவிகள் அதில்கலந்து கொண்டுநாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதினார்கள்.

இந்தவிழாவில் கவிஞர்வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர்விருது வழங்கப்பட்டது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பலஅடிகளார், தினமணி ஆசிரிய ர்கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்புவிருது வழங்கப்பட்டது.

திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியோடு சிறப்புப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டுசெல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்த தருண்விஜய் எம்.பி தெரிவித்தார்.

விழாவில் வைரமுத்து பேசும் போது

இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப்பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள்எழுதிக்கொண்ட 133 கண்மணிகள் இந்த நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள். இந்த மாபெரும்பணியைச் செய்த மக்களவை உறுப்பினர் தருண்விஜய்அவர்களுக்கு நான்நன்றி தெரிவிக்கிறேன். அதிகாரம் உள்ளவர்கள் தாம் நாடாளுமன்றத்துக்குள் நுழையமுடியும். இந்தக்குழந்தைகளும்அதிகாரத்தோடுதான் நாடாளுமன்றத்துக்குள்வந்திருக்கிறார்கள், திருக்குறளின் 133 அதிகாரங்களோடு.

மனிதர்களின் அடையாளம் முகம். மாநிலங்களின்அடையாளம்மொழி. மொழியின் அடையாளம்இலக்கியம். தமிழ்மொழிக்கான இலக்கியஅடையாளமாக, ஞானக்கருவூலமாகத் திகழ்கிறது திருக்குறள். அது தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டதுஎன்ற போதிலும் ஒவ்வொரு இந்தியனுக்கும்உரிமையானது; ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பொதுவானது.

பகவத்கீதை – கடவுள்மனிதனுக்குச் சொன்னது. திருவாசகம் – கடவுளுக்கு மனிதன்சொன்னது. திருக்குறள் – மனிதன் மனிதனுக்குச்சொன்னது.

தனக்குப் பொருத்தமில்லாத எதையும் வரலாற்றின் நீரோட்டம்கரையில் வீசியெறிந்திவிட்டுப் போய்விடும். ஆனால் திருக்குறளைக்காலம் அப்படி ஒதுக்க முடியவில்லை. ஏனென்றால், திருக்குறள் இந்தபூமியில் வாழப்போகும் கடைசி மனிதன்வரைசிந்திக்கிறது. அதனால்தான் இந்தத் தொழில்நுட்ப யுகத்துக்கும் அது பெரும்பாலும் பொருத்தமாக இருக்கிறது.

திருக்குறள் மனிதனைப் பேசுகிறது. ஆனால் அது தமிழன் – வங்காளி – மலையாளி – மராட்டியன் – தெலுங்கன் என்று இனம் பிரித்துப் பேசவில்லை. சொல்லப் போனால் தமிழ்என்ற சொல்லே திருக்குறளில் இல்லை. திருக்குறள் நிலம் பேசுகிறது. ஆனால் அது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று நாடு பிரிக்கவில்லை. எல்லாநிலத்திற்கும்எல்லா இனத்துக்கும் காற்றைப் போல் சூரியனைப்போல் பொதுவாகவே திருக்குறள் படைக்கப் பட்டிருக்கிறது.

இன்று இந்தஉலகத்தின் தலைக்குமேல்ஆடிக்கொண்டிருக்கிறவன் முறை என்றகத்திக்குஎதிராக மனிதமனங்களைச் சலவை செய்கிறது திருக்குறள். மனிதகுலத்தின் பெருஞ்செய்தியாக அதுஅன்பையே ஓதுகிறது. திருக்குறள்தான் டால்ஸ்டாய் என்றரஷ்யப்படைப்பாளிக்குஅகிம்சையைக்கற்றுத்தந்திருக்கிறது. “அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மனியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளில்இருந்து தான்நான் பெற்றுக்கொண்டேன்” (I have taken the concept of non-violence from a German Translation of Thirukkural)இது லியோடால்ஸ்டாயின் ஒப்புதல்வாக்குமூலம்.

புவிவெப்பமாதல்தான் அகில உலகமும் எதிர்கொள்ள வேண்டிய உடனடிப் பெரும்பிரச்சனை. இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமானால்33 விழுக்காடு விலங்கினங்கள் பூமியிலிருந்தே காணாமல்போய்விடும். இப்போதுபாரீஸில்நிகழ்ந்தபருவநிலைமாற்ற  உச்சிமாநாட்டில்  எட்டப்பட்டிருக்கிற முடிவுதான்மனிதகுலத்தின்  நிகழ்கால நிமிடத்தேவை.

“தாமதப்படுத்த வேண்டியவற்றைத் தாமதப்படுத்து; தாமதிக்கக்கூடாதவற்றைத் தாமதப்படுத்தாதே”

இதைத்தான் –

“தூங்குக தூங்கிச்செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும்வினை”

–    என்று ஈராயிரம்ஆண்டுகளுக்குமுன்பே நிர்வாக மேலாண்மைத் தத்துவமாக வள்ளுவம்உலகுக்கு வழங்கியது.

இந்த  மாதமழையி ல்எங்கள் சென்னை மூழ்கிவிட்டது. மழைத்தண்ணீர் மனிதர்களைக் குடித்துவிட்டுப் போய்விட்டது. எங்கள்வானம் பகலைத் தொலைத்துவிட்டது. இது ஒருநூற்றாண்டின் பேரழிவு. இந்தத்துயரம் பற்றியும் அதிலிருந்து மீள்வது பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறள்எங்களுக்கு வழிகாட்டுகிறது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை” என்பதுகுறள்.

“கெடுப்பதும் மழைதான்; கெட்டவர்களைமீண்டும் வாழவைப்பதும்மழைதான்” என்றுவள்ளுவர்சொல்லியிருக்கிறார். எங்களைஅழித்தமழையின்மிச்சம்எங்கள்பூமிக்கடியில்சேமிப்பாகக்கிடக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் அந்தநீரைப் பயன்படுத்திமூன்று  மடங்கு மகசூல் காண்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இழப்பை அப்படித்தான் நாங்கள் ஈடு செய்யப் போகிறோம். இந்த மழைச்சேதத்தைஈடுசெய்வதற்குமத்தியமாநிலஅரசுகள் விவசாயிகளுக்குக் கைகொடுக்கவேண்டும். உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்; பிழைப்பதற்கு  நாம்தான் வழிசெய்யவேண்டும். ஆதாரங்களை அழித்த அதே மழைநீரைப் பயன்படுத்திஅவர்கள்ஆதாயங்களை ஈட்டுவார்கள். வள்ளுவர் எங்களுக்கு வழங்கிய வாழ்க்கைப்பாடம் இதுதான். இப்படி வாழ்வுக்கு வழிகாட்டுவதால்தான் திருக்குறள் இன்னும் உயிர்ப்போடு விளங்குகிறது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள்திருவள்ளுவர் கொண்டாடப்படுவதில் இமயம் குமரிக்குவந்து குடைபிடிப்பதாய் மகிழ்கிறோம்.

இந்தியாவின் எல்லாதேசிய இனங்களிலும்உள்ளஞானச்செல்வங்கள்இப்படிஅடையாளம்காணப்படவேண்டும்; ஆராதிக்கப்படவேண்டும்.

இந்தியாவின் எல்லாத்திசைகளுக்கும் திருக்குறளை எடுத்துச்செல்லும் தமிழ்த்தூதர் தருண்விஜய் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும்என்நன்றி.

இன்று நாடாளுமன்றத்தின் வாசலைத் தொட்ட திருக்குறள் ஐ.நாமன்றத்தின் கதவுகளைத் தட்டும் நாள்  தூரத்தில்இல்லை.
.