நாத்திக வாலிபனுக்கும் ,முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் “பானு “

Seenu - Nandhini sreeபசவா புரொடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ் வழங்கும் “பானு ” எனும் புதிய  திரைப்படத்தை தயாரித்துள்ளது .

நாத்திக வாலிபனுக்கும் ,முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை உணர்த்தும் திரைப்படம்.

படத்தின் கதாநாயகர்களாக  GV சீனு DFT மற்றும் உதய ராஜ் அறிமுகமாகிறார்கள் .கதாநாயகியாக நந்தினி ஸ்ரீ நடிக்கிறார் .மேலும் ஜவஹர்,கவிப்ரியா ,நதிஷா ,சுஜிபாலா மற்றும் கோவைசெந்தில் ,சிசர் மனோகர் ,லொள்ளு சபா மனோகர் ,போண்டாமணி ,குள்ளமணி ,தினேஷ்மணி என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடிக்கின்றனர் .

இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைப்பெற்றது .இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன .ஒரு குத்தாட்ட பாடலுக்கு சுஜிபாலா ஆடியுள்ளார். இப்படத்தின் பாடலை அனுராதா ஸ்ரீ ராம் ,உன்னி கிருஷ்ணன் ,சத்யன் , லதா ராஜ்குமார் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளர்  உதய ராஜ் ஒரு பாடலையும்  பாடியுள்ளனர்.

-அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையிலுள்ள இத்திரைப்படம் விரைவில் திரையிடப்படுகிறது .

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து – இயக்கம் – GV சீனு DFT,  ஒளிப்பதிவு – K.அப்துல் ரஹ்மான் DFT,  இசை – உதய ராஜ்

பாடல்கள்  – GV சீனு , புரட்சி கனல் 

தயாரிப்பு  – பசவா புரொடெக்ஷன்ஸ்  மற்றும் ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ்