நான் என் மகன் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை : பி .வாசு

p.vasuபுதிய படமான 7 நாட்கள் திரைப்படத்தின் பூஜை , ஆரம்ப விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் பி.வாசு , நடிகர்கள் சக்திவேல் வாசு , கணேஷ் வெங்கட் ராம் , நடிகை நிகிஷா படேல் , அங்கனா ராய் , எம். எஸ். பாஸ்கர் , படத்தின் இயக்குநர் கௌதம் ,ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு , தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பி.வாசு பேசியபோது , ” இந்த ‘7 நாட்கள் ‘திரைப்படத்தின் கதை மிக சிறந்த கதையாகும் , இப்படத்தின் இயக்குநர் கௌதம் தயாரிப்பாளர் Trendக்கு ஏற்றவாறு படம் இயக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு அதை தங்கள் திறமைக்கு சான்றாக எடுத்து கொண்டு வருகின்றனர். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி ஒரு சூழல் இருந்தது இல்லை. இயக்குநர் ஸ்ரீதர் அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்யும் போது அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான ஒரு விஷயமாக இருந்தது. நான் இப்போது  என் மகன் சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பற்றி மட்டும் நான் தெரிந்து கொள்வது உண்டு ” என்றார்.