நான் ‘கார்குரல் கண்ணன்’ – சொல்கிறார் கரகரகுரல் விடிவி கணேஷ்

vtv-ganesh1தமிழ் திரையுலகில்பல்வேறு புகழ்பெற்ற நடிகர்கள் தங்களது குரல் வன்மையால் பெரும்பெயர் பெற்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர்  விடிவி கணேஷ். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, வானம், ஒஸ்தி, ‘இங்க என்ன சொல்லுது’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘போடாபோடி’ என ரசிக்க வைத்த இவரது புதிய படம் ‘கப்பல்’.

“‘கப்பல்’ ஃப்ரெண்ட்ஷிப் லவ்னு ஜாலியா யூத்தா ஒரு படம். நான்தான் காதலை சேர்த்து வைக்கும் தேவதையாக வருகிறேன். வைபவ்-க்கு ஹெல்ப் பண்றன் நான் ‘கார்குரல் கண்ணன்’. படத்தில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலும் ஒரு லவ் டாக்டரா என்னை பார்க்கிறார்கள். சில பேர் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி சேர்த்து வைக்க சொல்றாங்க” என சிரித்தார்.

‘கப்பல்’ படம் எனக்கு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் கிடைத்த புகழை மீண்டும் தரும். ‘I’ஸ்டுடியோஸ் தயாரித்த படத்தை ’S’ பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. ‘I’ ஃபார் இன்ட்ரெஸ்டிங், ‘S’ ஃபார் சூப்பர் இந்த இரண்டு வார்த்தையும் ஒரு ‘கப்பல்’ அளவுக்கு கிடைக்கும்” என்கிறார் விடிவி கணேஷ்.