நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு : ஜெயம் ரவி

jayam-r-solo - Copyகடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றியை  பத்திரிக்கையாளர்களிடம் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மன் பகிர்ந்து கொண்டார்கள். ஆமாங்க ஹன்சிகா ஆப்செண்ட் ஏதோ ஷூட்டிங்ல இருக்காங்களாம்.

படத்தை ரிலீஸ் செய்த காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் பேசியதாவது;
என்னோட முதல் ரிலீசான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் நான் எதிர்ப்பார்க்காத வெற்றியை எனக்கு பெற்று தந்தது, ஆனால் ரோமியோ ஜூலியட் படம் அப்படியில்ல 3 மாசத்துக்கு முன்னாடியே இந்த படத்தை எப்படியாவது நாமதான் ரிலீஸ் செய்யனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதன்படியே நந்தகோபால் சாரிடம் பேசி படத்தை என் பேனரில் ரிலீஸ் செய்தேன் தற்போது இப்படத்தின் ரிசல்ட் அனைவருக்கும் தெரியும். மனசுக்கு நிம்மதியா சந்தோஷமா இருக்கு, இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்தது எனக்கு கிடைத்த கௌரவமாக நான் கருதுகிறேன் என்று கூறினார்.
இயக்குநர் லக்‌ஷ்மன் பேசியதாவது;
முதலில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அறிமுக இயக்குநரான என்னை வெற்றியடைய வச்சத்து சந்தோஷமாக இருக்கு, எத்தனையோ இயக்குநர்கள் ஜெயம் ரவி சார் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள், ஆனால் அறிமுக இயக்குநரான என்னை அழைத்து எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ரவி சார் மற்றும் அவருடைய அப்பா எடிட்டர் மோகன் சாருக்கு என் நன்றி. நான் வணங்கும் கடவுளுக்கு அடுத்தபடியா இவர்கள் இருவரையும் நான் பார்க்கிறேன் என்று பேசினார்.

 

தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பேசியதாவது;
ரோமியோ ஜூலியட் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய மக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை எடுத்து முடித்தபிறகு அதனை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய காத்திருந்த எனக்கு பல கஷ்டங்கள் வந்தது, ஆனால் தற்போது இந்த வெற்றியை பார்த்தபிறகு அந்த கஷ்டங்கள் எனக்கு மறைந்துவிட்டது.
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது;
நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு, இந்த வருஷம் எப்படியும் மக்கள் பாராட்டும்படி ஒரு ஹிட் கொடுக்கனும்னு நினைச்சேன். அது ரோமியோ ஜூலியட் மூலம் நினைவாகியிருக்கு. இந்த படம் மக்கள் மத்தியில் அதிகமாக பேச காரணமான இசையமைப்பாளர் இமானுக்கு என் நன்றி. அடுத்ததாக படத்தை வாங்கி வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார், நிஜமாவே இவர் லக்கி மேன் தாங்க இவர் எந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறாரோ அந்த படம் கண்டிப்பா ஹிட்டு என்ற பெயரை எடுத்துட்டாரு. அப்புறம் ஹன்சிகா என்னைவிட மிக அற்புதமாக நடித்திருந்தார். ரசிகர்கள் அனைவரும் ஹன்சிகாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு காதல் கதையை எனக்கு கொடுத்த இயக்குநர் லக்‌ஷ்மனுக்கு என் நன்றி. படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால் இந்த படத்தை விரும்பி தயாரித்தார். இப்போ இந்த படம் வெற்றி அடைந்திருக்குன்னா அதற்கு நந்தகோபால் இந்த படத்தின் மீது வைத்திருந்த காதல் தான் முக்கிய காரணம். படம் ரிலீசுக்கு முன்பே எங்களுக்கு படத்தின் வெற்றிக்கான வைபரேஷன் தெரிஞ்சுது…