நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள்தான் : விஜய் ஆண்டனி

Pichaikkaran-Movie-Stills-2விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கியுள்ள படம் ‘பிச்சைக்காரன்’.இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி
நாம் எல்லாருமே பிச்சைக் காரர்கள்தான்  என்றார்.அவர்  ‘பிச்சைக்காரன்’. படம் பற்றிப் பேசும் போது.

” இது பிச்சைக் காரர்கள் பற்றிய கதையல்ல .பணக்காரன் பற்றிய படம். எப்படி பணக்காரன் பிச்சைக்காரனாக இருக்கிறான் என்று கூறும் கதை

இதில் நான் பிச்சைக்காரனாகவும் நடித்திருக்கிறேன். முதலில் நெகடிவ் தலைப்பு என்றவர்கள் எல்லாம் இப்போது பாசிடிவாக மாறிவிட்டார்கள்.

ஒரு வகையில் நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள்தான். எப்போதும் ஏதாவது பிச்சை எடுத்துக் கொண்டே இருக்கிறோம். காசு, பணம், உதவி, வாய்ப்பு ஏதாவது ஒன்றை எல்லாரும் பிச்சை எடுத்துக் கொண்டே இருக்கிறோம் .

‘பிச்சைக்காரன்’என்று சுலபமாக சொல்லி விடுகிறோம். உனக்கு கைகால் நல்லா இருக்கு ஏன் பிச்சை எடுக்கிறாய் ?’ என்று சுலபமாக சொல்லி விடுகிறோம்.  ஆனால் அவன் வீட்டில் அவன்தான் சூப்பா ஸ்டார்.

Satna Titus, Vijay Antony in Pichaikaran Movie Stillsநான் இந்தப் படத்துக்காக நிஜமான சில பிச்சைக்காரர்களுடன் உட்கார்ந்து பிச்சை எடுத்தேன் அப்போது அவர்களுடன் பேசிப் பழகினேன். இனி சுலபமாக ‘பிச்சைக்காரன்’என்று என்னால் பேசிவிட முடியாது. இப்படம் வருகிற 26ல் வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 350 தியேட்டர்களில் வெளியாகிறது. ” என்றார்.