நால்வர் அணியின் கலகலப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் !

devadass-bros.postதிலகர் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன் துருவா… மெட்ராஸ்
படத்தில் ஜானியாக வாழ்ந்து காட்டிய ஹரி… ராஜதந்திரம் படத்தில் அடையாளம் காணப்பட்ட அஜய் பிரசாத்… டார்லிங் படத்தை கலகலப்பாக்கிய பாலசரவணன்…

இப்படி தனித்தனியாக முத்திரை பதித்த ஒவ்வொருவரும் தேவதாஸ் பிரதர்ஸ் படம் மூலம் சகோதரர்களாகி இருக்கின்றனர்.

சகோதரர்கள் என்பதால் குடும்பம் சார்ந்த கதையோ என எண்ண வேண்டாம். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய காதல், நட்பு, நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி இருக்கிறது தேவதாஸ் பிரதர்ஸ்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதற்பார்வையை இன்று ’’கபாலி’’ இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட, நடிகர் கலையரசன் பெற்றுக்கொண்டார். மெட்ராஸ் டீம் ஜானியின் படம் என்பதால் மெட்ராஸ் டீமே தங்கள் படம் அளவுக்கு மகிழ்ந்தது. அந்த மகிழ்ச்சியில் மெட்ராஸ் ரித்விகாவும் பங்குகொண்டார்.

devadass-brosமாநகரத்தை நோக்கி வரும் நான்கு வெவ்வேறு இளைஞர்களை ஒன்றிணைக்கும் இந்த தேவதாஸ்  பிரதர்ஸ் படம் குடும்பங்களை திரையரங்குகள் பக்கம் ஈர்க்கும் வகையில் கோடை
விடுமுறையில் வரவிருக்கிறார்கள்.

இப்படத்தை கே.ஜானகிராமன் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் சற்குணம், ஐஸ்வர்யா தனுஷ், வேல்ராஜ்ஆகியோரிடம் சினிமா பயின்றவர்.

துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள்.  சஞ்சிதா ஷெட்டி,  ஷில்பா ஷெட்டி, தீப்தி மன்னே, ஆரா   என 4 பேர்  நாயகிகள்.  மயில்சாமி, ரோபோ சங்கர் இவர்களுடன்  நடிக்கின்றனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு எம்.சி.கணேஷ் சந்திரா. இவர் ‘சலீம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசை தரண்குமார் -இவர் ‘போடா போடி’ ,’நாய்கள் ஜாக்கிரதை’ படங்களுக்கு இசையமைத்தவர், கலை- ‘குற்றம் கடிதல்’பிரேம், பாடல்கள்- யுகபாரதி ,படத்தொகுப்பு -‘வேலையில்லா பட்டதாரி’ எம்.வி.ராஜேஷ்குமார்.

எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் படத்தை தயாரிப்பவர்கள் வி. மதியழகன், ஆர். ரம்யா.