அம்மணி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் படம்!

ammani1பிரபல நடிகை  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் ‘அம்மணி’. தமிழ் திரையுலகில் அனைவராலும் மதிக்கப்பட்டும் தயாரிப்பாளர்  Tag Entertainment நிறுவனர்  வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

அம்மணி பற்றி தயாரிப்பாளர் கூறுகையில் ‘ ‘நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிதத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.”எனக் கூறினார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா.

“ ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மைக்கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல் இரவென பாராமல் பர பரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார்.

பாட்டி என்றழைத்தால் பிடிக்காத 82 வயதான இந்நடிகை தன்னை ‘‘அக்கா’னு கூப்பிடுங்க’ என்பார். அவரது

உற்சாகம் எங்களை  குதூகலத்தில் ஆழ்த்தியது. யதார்த்த சினிமாக்களுக்கு மக்களிடம் வரவேற்ப்பு

அதிகரித்துள்ளது, அம்மணியும் அனைவரும் கொண்டாடும் ஒரு திரைப்படமாய் அமையும்.” என்று

நம்பிக்கையுடன் தெரிவித்தார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா.