நிறைய படியுங்கள் : திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு இயக்குநர் மகிழ்திருமேனி கூறிய அறிவுரை!

mahizh-cp5அண்மையில்  எம்.ஜி.ஆர்.திரைப்படக் கல்லூரியில் ‘மீகாமன்’ திரைப்படம் திரையிடப்பட்டது அப்போது திரைப்பட கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடலில்இயக்குநர் மகிழ்திருமேனியும்,ஒளிப்பதிவாளர் சதீஷும் பங்கேற்றார்கள் .அங்கே திரைப்பட கல்லூரி செயலாளர் முத்துமாணிக்கம் மற்றும் ஒளிப்பதிவு துறை ஆசிரியர் ராமக்கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கும் பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார்கள்.மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள்  நினைவு பரிசாக வழங்கப்பட்டன.

ஒளிப்பதிவாளர் சதீஷ் பேசுகையில்
” நான் இக்கல்லூரியின் முன்னாள் மாணவன் அதேபோல் இந்த கிறிஸ்மஸ் அன்று வெளிவந்த நான்கு படத்தின் ஒளிப்பதிவாளர்களும் நம் திரைப்பட கல்லூரியின் முன்னாள் மாணவர்களே .ஒளிப்பதிவாளர் என்பவர் அப்படத்தின் இணை இயக்குநர் போன்றவர்.ஒரு படத்திற்கு ஒளிப்பதிவாளர் அப்படத்தின் கதையை  முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் அப்போதுதான் அது கேட்கும் லோகேஷன் மற்றும் கலர் ,லைட்ஸ் ஆகியவற்றை தரமுடியும் ”என்றார்.
இயக்குநர் மகிழ்திருமேனி பேசுகையில்:
‘மாணவர்கள்  அதை மனப்பாடம் செய்யாமல் உங்கள் கற்பனைத் திறனைக் கொண்டு அதை நினைவு கூரும் போது அதற்கு வேறு கதை உருவாகும் .மேலும் நீங்கள் எழுத நினைக்கும் கதையின் கருக்கு ஏற்ப நிறைய புத்தகங்கள் படித்தும் எதார்த்தத்தை கொண்டு வாருங்கள் . .இந்த மீகாமனில்கூட நாயகி ஹன்சிகா கதாபாத்திரம் தன உச்சகட்ட லட்சியமாக அந்த கல்சுரலில் வெற்றி பெற வேண்டும் என்பதாக எண்ணி அதையே தனது வாழ்வா சாவா என்ற நிலையில் இருப்பதாக கூறும்.ஆனால் அங்கே நாயகனுக்கு தான் அந்த பிரச்சனை நாயகனை போல் சில மனிதர்கள் உதாரணமாக ராணுவ வீரன் ,போலிஸ் யாரோ ஒருவன் உயிரை துச்சமாக நினைத்து போராடுவதால்தான் ஹன்சிகா  போன்ற அமைதியான மனிதர்கள் அமைதியாக வாழமுடிகிறது. இப்படித்தான் திரைக்கதை அமைத்தேன் . அதேபோல் ஜோதி என்ற வில்லன் கதாபத்திரம் 5 ரூபாய் 35பைசாவுக்கு  கொலை செய்ததாக கூறும். அதில்  எவ்வளவு சில்லறை இருந்தது எனவும் கூறும் இந்த டயலாக் வைத்ததற்கு காரணம் நான் ஜோதி கதாபாத்திரத்தை ஆடம்பரம் இல்லாத மனிதனாக காட்டி இருப்பேன். ஆனால் அவனுக்கு பணம் முக்கியம் என்பதை சொல்லத்தான் அந்த டயலாக் ”என்றார். இதேபோல் நிறைய காட்சிகளுக்கு அவர் கூறிய நுணுக்கமான விரிவாக்கத்தை கேட்ட மாணவர்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்

மேலும் மாணவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் இயக்குநர் பதில் அளித்தார் இப்படி மாணவர்களோடு கலந்துரையாடியது மனதிற்கு மழ்ச்சியளித்ததாகவும் இந்த  வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களுக்கும்  நன்றியும் தெரிவித்தார் இயக்குநர்  மகிழ்திருமேனி.