நீண்ட இடைவெளிக்குப் பின் நமீதா நாயகியாக நடிக்கும் ஹாரர் படம் ‘மியா’!

namee1நீண்ட இடைவெளிக்குப் பின்  நமீதா நாயகியாக நடிக்கிறார்.’இ’ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் அவர்கள் தயாரிக்கும் படம் ‘மியா’ இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குப்பின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘மியா’ மற்ற பேய் படங்களைப் போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது.

கணவன் – மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் மியா படத்தின் கதை. கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளனர்.sony1

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மியா திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இயக்குநர்களாக களமிறங்கும் ஆர். எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா, மலையாளத்தில் ‘ஸ்பீடு’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர்களாவர். ‘ஸ்பீடு’ படம் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It

Comments are closed.