படப்பிடிப்பில் ஜோதிகா பரபரப்பில் ரசிகர்கள்!

jothika21மீண்டும்  நடிக்க வந்த  ஜோதிகாவின்  படப்பிடிப்பில் ரசிகர்கள் திரண்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மஞ்சுவாரியர் பாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் இந்த படத்தின் கதை பிடித்து போனதால் நடிக்கச் சம்மதித்தார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் துவங்கியுள்ளது. இதற்காக ஜோதிகா டெல்லி சென்றுள்ளார். அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு படமாகி வருகிறது. ஜனாதிபதியை ஜோதிகா சந்திப்பது போன்றும், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டங்கள் அமைத்து சாதனைப் பெண்ணாக மாறியதற்காக ஜோதிகாவை ஜனாதிபதி பாராட்டுவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

இதில் ஜனாதிபதி வேடத்தில் பிரபல இந்தி தயாரிப்பாளர் சித்தார்த் பாசு நடிப்பதாக கூறப்படுகிறது.

பல வருட இடைவெளிக்கு பிறகு நடித்தாலும் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக இருந்ததாக படக்குழுவினர் பாராட்டினர்.

படப்பிடிப்பில் ஜோதிகாவை காண ரசிகர்கள் திரண்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
jothika2