படமாகும் பிரபல வசனம் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’

பிரபலமான வசனங்கள் படங்களின் தலைப்பாவது தற்போதைய தமிழ் சினிமாவின் போக்காக வளர்ந்து arasiyall--1வருகிறது. அப்படி பேசப்பட்ட ஒற்றை வரி வசனங்களில் பிரபலமானது ‘சூரியன்’ படத்தில் கவுண்டமணி பேசும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ என்ற வசனம். இந்த வசனத்தை வைத்து தற்போது ஒரு படம் உருவாகி வருகிறது.

இதில் கணேஷ் பிரசாத் நாயகனாகவும் அவருடன் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஜான் விஜய், மனோபாலா, சுப்பு அருணாசலம், என நகைச்சுவை பட்டாளமே நடிக்க உள்ளது. இப்படத்தை பல்வேறு வெற்றிப் படங்களுக்கு கதை அமைப்பாளராக பணியாற்றிய சக்தி அஜய் குமார் இயக்குகிறார்.

தற்போதைய அரசியல் நகைப்புக்குரியது தான். சராசரியான குடிமகனாக நாம், நமக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு அந்த அரசியலை ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ என்று சகித்துக் கொள்ள கற்றுக் கொண்டோம். இப்படம் வெறுமனே சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்கவும் வைக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் 11-ம் தேதி துவங்க உள்ளது. இந்த படம் உண்மையை நகைச்சுவையுடன் உரக்க சொல்லும் படமாகும் என்று இயக்குநர் சக்தி அஜய் குமார்கூறுகிறார்..