படமாகும் ரஜினியின் இன்னொரு தலைப்பு ‘குப்பத்து ராஜா’

மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட தலைப்புகள் இன்றும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக வெற்றி ரதத்தில் வேகமாக பயணித்து கொண்டிடுருக்கும் G V பிரகாஷ், பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்கவிருக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
இப்படத்திற்கு ‘குப்பத்து  ராஜா’ என்ற   ரஜினியின் சூப்பர் ஹிட் தலைப்பை சூட்டியுள்ளனர். இப்படத்தினை ‘S Focuss’  சார்பில்  எம்.சரவணன்,  எஸ்.சிராஜ் மற்றும் .T. சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இவர்களோடு இணைந்து படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார்.  நிர்வாக தயாரிப்பாளர் கர்ணாராஜா. இப்படத்தில்  G V பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடித்துள்ளனர்.
 
இப்படத்தில் பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். G V பிரகாஷ் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் KL  படத்தொகுப்பில், அன்பு அறிவு மற்றும் திலிப் சுப்புராயன் சண்டையமைப்பில் மற்றும்  D R K கிரணின் கலை இயக்கத்தில் ‘குப்பத்து ராஜா’ உருவாகியுள்ளது. 
 
”சினிமா ரசிகர்களின் ரசனையை  பலகாலமாக விநியோகஸ்தர்களாக இருந்து கண்டறிந்ததால் சினிமா தயாரிப்பில் கால் எடுத்துவைக்க முடிவு செய்தோம். தயாரிப்பாளர்களின் விருப்பமாகவும் இன்றைய இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் கதாநாயகனாக இருப்பவர் G V பிரகாஷ். அவரது கதாநாயகன் அந்தஸ்து கூடி வருவதை எல்லோரும் காணலாம்.   படத்தின் கதையை பாபா பாஸ்கர் எங்களிடம் கூறியபொழுது நாங்கள் ஆச்சிரியப்பட்டோம்  . பிரபல நடனமாசிரியரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான  இயக்குநர் இருக்கிறார் என்பது எங்களுக்கு அன்று தான் தெரிந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது. ரஜினி சாரின் வெற்றி தலைப்பு என்பதால் மட்டுமில்லாமல் இக்கதைக்கும் மிக சரியாக பொருந்துவதால் ‘குப்பத்து ராஜா’ தலைப்பை சூட்டினோம்” என இப்பட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து post production பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை தின்ங்களில் இப்படம் ரிலீசாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.
Pin It

Comments are closed.