படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை!

IMG_8122
மிர்ச்சி செந்தில், ஸ்ருதி பாலா நடிக்கும் ‘ரொம்ப நல்வன்டா நீ ‘ படத்தின் ஊடக சந்திப்பு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, படக்குழுவினர் அனைவரும் படப் பெயர்ப் பட்டைகளை  டவாலி போல் தோளின் குறுக்கே  அணிந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது

“இது என் பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படம். முழுக்க முழுக்க நகைச்சுவை நிரம்பியுள்ளது. இந்தக் கதையை தயார்செய்து விட்டு பல கதாநாயகர்களிடம் சொன்னேன். யாரும் நடிக்கத் தயாராக இல்லை. பலர் காது கொடுத்து கேட்கவே இல்லை.

முன்பின் தெரியாதவர்களிடம் பிரச்சினையைச் சொன்னால் தீர்வு கிடைக்காது. அந்த பிரச்சினை பெரிதாகவே மாறும்.முகம் தெரியாதவர்கள் சொல்லும் அறிவுரையை கேட்கக் கூடாது.
பிறகு ஏன்டா அவரை சந்தித்தோம் என்று நினைக்கத்தோன்றும். அப்படிப்பட்ட சம்பவங்கள் கொண்டது தான் இக்கதை.

இந்தக்கதையுடன் நல்ல தயாரிப்பாளர் தேடிய போது கிடைத்தவர்தான் இந்த தயாரிப்பாளர் தீபக்குமார் நாயர். கதை கேட்டுவிட்டு பட்ஜெட் கேட்டார். கொடுத்தேன் .குறிப்பிட்டபடி முடிக்க முடியுமா என்றார். ஓகே முடியும் என்றேன். ‘ஓகே. பட் ஒரு நிபந்தனை படம்  ஓடி ஜெயித்தால்தான் சம்பளம் தருவேன்’ என்றார். ஓகே என்றேன். இப்படி உருவானதுதான் இப்படம் ” என்றார்.

படக்குழுவினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள்.

Pin It

Comments are closed.