படம் வருமுன்பே பாராட்டுகளைக் குவிக்கும் ‘குற்றம்கடிதல்’

kutramkadithal2வெகுஜன திரையீட்டுக்கு வருமுன்பே ‘குற்றம்கடிதல்’ படம் சிறந்தபடம் எனபரவலான  அங்கீகாரமும் பாராட்டும்  பெற்று வருகிறது. நல்லசினிமாவைப் பாராட்டும்அரங்கங்கள் எங்கு இருந்தாலும்பரவலான அங்கு தமிழ்நாட்டின்பெயரையும் , தமிழ் சினிமாவின் பெயரையும் குற்றம்கடிதல்’ படம் நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறது. பிரம்மா .G.என்றஅறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஜே .எஸ்கே film corporation என்கிறநி றுவனத்தின் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் கிரிஸ்ட்  pictures  சார்பில்கிறிஸ்டி தயாரிக்கும் ‘குற்றம்கடிதல்’ ஜிம்பாப்வே திரைப்படவிழா, மும்பைதிரைப்படவிழா, இந்தியன் பனோரமா ஆகிய திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் , மற்றும் கௌரவத்தையும் பெற்றதைப் போல இப்போது பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது  சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொள்ளத் தகுதி பெற்று இருக்கிறது.’ ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்லசேதி தந்து கொண்டுஇருக்கிறது. இந்த சந்தோஷத்தைச் சொல்லில் அடக்க முடியாது.இந்த தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான்  இப்போது பயிற்சியாக மேற்கொண்டுள்ளேன்.அதை வழக்கமாக மாற்றுவேன்  ‘ எனக்கூறினார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.