படிக்காத மேதையாக மா.கா.பா. ஆனந்த் நடிக்கும் படம்!

Ma Ka Pa Anand 4மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் “ மாணிக் “ திரைப்படத்தின் பூஜை மற்றும் ஆரம்ப விழா இன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில்  நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மார்டின் படத்தை பற்றி பேசியபோது , ”இப்படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் படத்தின் கதாநாயகன் சென்னையில் வசிக்கும் பேச்சிலராக வருகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணமே கதை ” என்றார்.இதை  இயக்குநர் மார்டின் பேன்டசி கலந்து இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் மா.கா.பா. ஆனந்த் படிக்காத மேதையாக வருகிறார் , நாயகி சூசா குமார் புதுமையான கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மனோ பாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.