பத்திரிகையாளர் இயக்கும் புதிய படம்..!

aravind44 ட்ரீம் வீவர்ஸ் (Dream weavers) மற்றும் ஹனி பீ மூவிஸ் (Honey B Movies) இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி திருநாளான நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்தது கொண்டு பட பூஜை நிகழ்வை துவக்கி வைத்தனர்.

ar7இப்படத்தினை அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார். படத்தின் நாயகனாக வர்மா நடிக்கிறார். இவர் தற்போது பிரபல தயாரிப்பாளரான C.V.குமார் தயாரிக்கும் திரைப்படம் உட்பட மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி, இசை – தேவ் குரு, நிர்வாக தயாரிப்பாளர் – யோகேஷ் கிருஷ்ணா, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – ட்ரீம் வீவர்ஸ் (Dreamweavers) மற்றும் ஹனி பீ மூவிஸ், எழுத்து – இயக்கம் – அரவிந்த் ஸ்ரீநிவாசன்.

இந்தப் படம் தமிழ் மலையாளம் என ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கான கதாநாயகி, இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

நவம்பர் மாதம் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி கோயமுத்தூர், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கிறது.

எங்களது பத்திரிகையாளர் குழுமத்தில் இருந்து இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசனின் புதிய படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்..!