பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்!

imagesபத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம் செய்து  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர், எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.தவிர இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியஇருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர், எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையை இங்கே வெளியிட்டுள்ளோம்.

‘லிங்கா’ படம் தொடர்பாகதயாரிப்பாளர்சங்கத்தலைவர்கலைப்புலிஎஸ்.தாணு, நடிகர்சங்கத்தலைவர்ஆர்.சரத்குமார்ஆகியோருடன் ‘லிங்கா’ திரைப்படவினியோகஸ்தர்கள்பிப்ரவரி 19ம்தேதிபேச்சுவார்த்தைநடத்தினர்.

மொத்தநஷ்டத்தில் 8 கோடிரூபாய்நஷ்டத்தைநாங்கள்ஏற்றுக்கொள்கிறோம், மீதியைத்தாருங்கள்என்றுவினியோகஸ்தர்கள்கோரிக்கைவைத்தனர். இதுசம்பந்தமாகதயாரிப்பாளர்ராக்லைன்வெங்கடேஷ், நடிகர்ரஜினிகாந்த்ஆகியஇருவருடன்பேசிஒருசுமூகமானமுடிவுக்குஏற்பாடுசெய்வதாகசரத்குமார்உறுதியளித்தார்.

சுமூகமான சூழலில் இப்பிரச்சனை கையாளப்பட்டுக் கொண்டிருந்தவேளையில் ராக்லைன்வெங்கடேஷ் பெங்களூரு சிட்டிசிவில்கோர்ட்டில் ‘லிங்கா’ படத்தின் 9 வினியோகஸ்தர்களுக்குஎதிராகவும், தமிழகத்தில்இருக்கும்தமிழ், ஆங்கிலநாளிதழ், வாரஇதழ், மாதஇதழ், மற்றும்தொலைக்காட்சிஊடகங்கள், இணையதளங்கள்ஆகியவை ‘லிங்கா’ படம்சம்பந்தமாக செய்திகளை வெளியிடக்கூடாதுஎன நீதிமன்றதடை உத்தரவைபெற்றார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

படம் வெளிவருவதற்கு முன்பு ஊடகங்களை தங்களுடைய படபிரமோஷனிற்காக பயன்படுத்திக்கொண்ட ரஜினிகாந்த், ராக்லைன்வெங்கடேஷ் தரப்பு படம்வெற்றி, தோல்வி சம்பந்தமாக வரும்எதிர்மறையான செய்திகளை ஜனநாயக அடிப்படையில்சந்திக்கவேண்டுமேதவிர, சர்வாதிகாரஅடிப்படையில் ஜனநாயகத்தின்நான்காவது தூண்என்றுசொல்லப்படும் மீடியாக்களுக்கு எதிரானநிலையை எடுப்பதுவருத்தத்திற்குரியதும், ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அல்ல.rock22

இதுபோன்ற ஒருதடை உத்தரவை  ரஜினிகாந்திற்குத் தெரியாமல் ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்றே கருதுகிறேன். எனவே, இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியஇருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்.

கடந்த 60 நாட்களுக்குமேலாக நீடித்துவரும் ‘லிங்கா’ படவினியோகஸ்தர் நஷ்டஈட்டுப்பிரச்சனையை சுமூகமானமுறையில்தீர்ப்பதற்கு தமிழ்நாடுதிரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவரான ஆர்.எம்.அண்ணாமலை, தமிழ்த்திரைப்படகூட்டமைப்பு தலைவரானஆர்.ராமசுப்புஎன்கிற பாலாஜி ஆகியோர் தலையிடவேண்டுகிறேன்.

சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சிநகரம், ஆகியபகுதிகளில் தற்போதுவிகிதாச்சார அடிப்டையிலேயே படங்கள் திரையிடப்படுகிறது. இதேபோன்றுதமிழ்நாடுமுழுமையும்விகிதாச்சாரஅடிப்படையிலேயே இனிவரும் காலங்களில் புதியபடங்களைத்திரையிடதமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்சங்கம், வினியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க உள்ளது. இதன் மூலம் நடிகர்களுடையசம்பளத்தையும், தயாரிப்புச்செலவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். தொடர்ச்சியாக நஷ்டப்பட்டுவரும், தயாரிப்பாளர்கள்,  வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் கஷ்டம் போக்கப்படும்.

‘லிங்கா’ படம் திரையிட்டதின்மூலம் தாங்கள் நஷ்டப்பட்டாலும்பரவாயில்லை, தங்களை நம்பிஅட்வான்ஸ் கொடுத்த திரையரங்குகளும், எம்ஜிஅடிப்படையில்பணத்தைச் செலுத்தியதிரையரங்குகளும் நஷ்டமடைந்துவிடக்கூடாதுஎன்பதற்காகஅவர்களது பணத்தைத்திருப்பிவாங்கித்தருவதற்குத் தொடர்ச்சியாகப் போராடிவரும் ‘லிங்கா’ பட வினியோகஸ்தர்களை மனதாரப்பாராட்டுகிறேன், அவர்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.