பயணத்தில் வரும் சந்திப்பு என்றுமே சுகமான நினைவுகள் ‘கடவுள் இருக்கான் குமாரு’

Avika_Gorஅம்மா கிரியேசன் டி. சிவா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் “” இப்படத்தில்

பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அவிகா கோர் நடிக்கிறார் மற்றுமொரு கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிப்பது உறுதியாகியுள்ளது.  மேலும் தம்பி ராமையா , பிரம்மானந்தம் , R.J.பாலாஜி ,நான் கடவுள் ராஜேந்திரன் , ரோபோ ஷங்கர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்.

G.V.Prakash kumarஇப்படத்திற்கு ஒளிப்பதிவு சக்தி சரவணன்,இசை G.V.பிரகாஷ் குமார் , கலை வைரபாலன். இப்படத்திற்கான படப்பிடிப்பு தள தேடுதலில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் பாண்டிச்சேரியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு தளங்களாக கடற்கரை ஓரங்களே தேந்தேடுக்கப்பட்டுள்ளன. கோவா , பாண்டிச்சேரி மற்றும் விசாகபட்டின்னமே படத்தின் முக்கிய படபிடிப்பு தளங்களாக இருக்கும் .

“ தெய்வ வாக்கு” “ சின்ன மாப்ளே” “ ராசையா “ “ அரவிந்தன் “ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்தவர் அம்மா கிரியேஷன்ஸ்

​டி.சிவா மீண்டும் மற்றொரு பிரம்மாண்ட படைப்பாக “ கடவுள் இருக்கான் குமாரு “ படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை ராஜேஷ் .M கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார்.  ‘ சிவா மனசுல சக்தி”, “ ஒரு கல் ஒரு கண்ணாடி” ,“பாஸ் என்கிற பாஸ்கரன் “, “ ஆல் இன் ஆல் அழகு ராஜா “, “ வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க “ படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த ராஜேஷ்.M மீண்டும் தனக்கே உரித்தான காமெடி , காதல் கலந்து பட்டையை கிளப்ப வருகிறார்.m.rajeshஎவ

பயணத்தில் வரும் சந்திப்பு என்றுமே சுகமான நினைவுகள் தான். அப்படி ஒரு பயணத்தில் இரண்டு பெண்களை நாயகன் சந்திக்கிறான். நாயகனை ஒருத்தி காதலிக்க , நாயகனோ மற்றொருவளை காதலிக்கிறாண் . இதன் முடிவு படுசுவாரஸ்யம் என சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ்.M.

இதன் படபிடிப்பு  மார்ச் முதல் வாரத்தில்சென்னையில் ஆரம்பமாகிறது.