பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா!

maya1இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா.

அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடைக் கலைஞர், க்ளௌன் (Clown) மருத்துவர், சிலம்பாட்ட கலைஞர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார்.

மாயா தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திலும், இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் “மகளிர் மட்டும்” படத்திலும், சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனது திரையுலக பயணம் பற்றி மாயா குறிப்பிடுகையில், “நான் திரைத்துறையில் நடிக்க வந்ததும், பாடகியாக உருமாறியதும் எதிர்பாராமல் நடந்த இனிய விபத்தாகும். ஒரு நடிகையாக எனது நடிப்பை மெருகேற்றியதில் மேடை க்கலைஞர் கிருஷ்ணகுமார் அவர்களின் பங்கு மிக பெரியதாகும்.

என்னை பொறுத்தவரையில் நடிப்பை பொருளீட்டும் ஒரு துறையாக நான் கருதவில்லை. நடிப்பில் என் தனித்துவத்தைக்maya2  காண்பித்து ஒரு சிறந்த நடிகையாக விளங்குவதே எனது குறிக்கோள். நான் பணியாற்றும் எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழவேண்டும்” என்று நடிகை மாயா கூறினார்.