பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து!

vairamuthu4ltவிஜய் – சூர்யா – விஷால் – கார்த்தி – விஜய் சேதுபதி

விக்ரம்பிரபு – உதயநிதி – அல்லு அர்ஜுன் படங்களுக்கு

பாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள்

எழுதி வருகிறார். கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு  அதிக நேரம் ஒதுக்கிய

கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச்

செலவிடுகிறார்.

புகழ் மிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பரதன் இயக்க விஜய் நடிக்கும்

அவரது அறுபதாவது படத்திற்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து

எழுதுகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ்

நாராயணன் இசை அமைக்கிறார்.மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க

கார்த்தி – சாய் பல்லவி நடிக்கும்  புதிய படத்தில் ஏழு பாடல்கள் எழுதுகிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பிரமாண்டமான படத்தில் எட்டுப்

பாடல்கள் எழுதுகிறார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடிக்கும் ’24 ‘ படத்திற்கும் கவிஞர்

வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரகுமான்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி – தமன்னா நடிக்கும் தர்மதுரை படத்தில்

எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா

இசையமைத்திருக்கிறார்.

விஷால் – ஸ்ரீதிவ்யா நடிக்க முத்தையா இயக்கும் மருது படத்தில் இமான் இசையில்

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி வருகிறார்.

ஜி.என்.ஆர் குமரவேல் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ரன்யா ராவ் நடிக்க, இமான்

இசையமைக்கும் வாகா படத்தில் இதயத்தை உருக்கும் காதல் பாடல்கள்

எழுதியிருக்கிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி – மஞ்சிமா மோகன் ஜோடி சேரும் புதிய படத்தின்

எல்லாப் பாடல்களையும் இமான் இசையில் எழுதுகிறார்.

இளைய தலைமுறையின் வாழ்வியல் மாறுதலுக்கேற்பப் புதிய மொழிநடையை

உருவாக்கி வருவதாகக் கவிஞர் வைரமுத்து கூறினார்.

எதிர்காலத்தில் பாடல்களே இல்லாத படங்கள் வருமா என்ற கேள்விக்கு “பாடல்கள்

இல்லாத படங்களைத் தயாரிக்க முடியும்; பாடல்கள் இல்லாத வாழ்க்கையைத்

தயாரிக்க முடியுமா?” என்றார் கவிஞர் வைரமுத்து.