பாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது : விவேக்!

 பாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் வெள்ளைப்பூக்கள். விவேக் இளங்கோவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விவேக், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விவேக், “40 வருடங்களுக்கு முன்பு மகேந்திரன் இயக்கத்தில் உதிரிப்பூக்கள் படம் வெளியாகி எப்படி புதிய ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல் வெள்ளைப்பூக்கள் படமும் புதிய ட்ரெண்டை உருவாக்கும். இந்தப் படத்தில் சார்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்குள் எப்போதும் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் இருக்கிறார்.

பொதுவாக நான் காமெடியனாக நடிக்கும் படங்கள் ஹிட் ஆகிவிடும். ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மட்டும் ஏதாவது பிரச்னை வந்துவிடுகிறது.

நான் இதுவரை நடித்த படங்களிலேயே சிறந்த படமாக நான் தான் பாலா படத்தைச் சொல்லலாம். ஆனால் அந்தப் படம் ரிலீஸான சமயத்தில் பாபநாசம் படத்தில் பாபநாசம் படம் வெளியானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது.

அதிக திரையரங்குகள் பாபநாசம் படத்துக்கு கிடைத்ததால் என்னுடைய படத்தைப் பார்க்கக் கூட ஆள் இல்லை. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒன்று நடக்கும்.இந்தப் படத்திற்காக என்னிடம் நடிக்கக் கேட்டபோது இந்த கதாபாத்திரத்துக்கு நடிகர் சத்யராஜ்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறினேன்.

ஆனால் அவர் ஏற்கெனவே இதுமாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார் என்று கூறியதால் தான் நான் ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படத்தைப் பற்றி என்னுடைய நண்பர் என்ற முறையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூறி நீங்களே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படத்தை முடித்து விட்டு வரச் சொன்னார். ஆனால் அவர் அப்போது வேறு படங்களில் பிஸியாகிவிட்டதால் இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை” என்று கூறினார்.

Pin It

Comments are closed.