‘பாம்பு சட்டை’ படப்பிடிப்பு நிறைவு !

unnamed-5பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது

பணத்தின் மீது மக்கள் எந்த அளவிற்கு அளவில்லாத ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்திய திரைப்படம், நடிகர் மனோபாலாவின் தயாரிப்பில் உருவான ‘சதுரங்க வேட்டை’.

இத்தகைய வலுவான கதையம்சம் நிறைந்திருக்கும் படங்களைத் தேர்வு செய்து, தயாரிப்புத் துறையில் தனக்கென ஒரு பெயரைச்  சம்பாதித்து இருக்கிறார் மனோபாலா. தரமான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் உருவெடுத்து வரும் மனோபாலா, தற்போது அவருடைய அடுத்த தயாரிப்பான ‘பாம்பு சட்டை’ திரைப்படம் மூலம், தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர இருக்கிறார்.

பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாம்பு சட்டை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, மிகுந்த உற்சாகத்தோடு  நிறைவு பெற்றது. தற்போது தொழில் நுட்ப ரீதியாக படத்தை மேலும்  மெருகேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும்   ‘சினிமா சிட்டி’ கே கங்காதரனோடு இணைந்து,  அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர்  அபினேஷ் இளங்கோவன் இந்த படத்தை வெளியிட இருக்கிறார்.

Pin It

Comments are closed.