பார்ரா ஒரு டப்பிங் படத்துக்கு வந்த மவுசை…350 திரையரங்கில் வெளியாகும் ‘ செல்வி’

selvi2சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கில் “ பாகுபங்காராம் “  என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக  தமிழில் உருவாகிறது.  படம் ஆகஸ்ட் 12 ம் தேதி  350 திரையரங்குகளில் வெளியாகிறது.

போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  ரிச்சர்ட் பிரசாத்

இசை   –  ஜிப்ரான் , எடிட்டிங்   –  திரிநாத்

பாடல்கள்   –  கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன்  SBI.

இயக்கம் –  மாருதி. இவர் ஏற்கனவே 20 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அதில் எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.

இணை தயாரிப்பு  –  சத்யசீத்தால, வெங்கட்ராவ்

தயாரிப்பு   –  பத்ரகாளி பிரசாத்

வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் –  ARK.ராஜராஜா.

ARK.ராஜராஜாவிடம் படம் பற்றி கேட்டோம்…

வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே  லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது.  ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக செல்வி உருவாகி உள்ளது.