‘பிச்சைக்காரன்’ விமர்சனம்

Satna Titus, Vijay Antony in Pichaikaran Movie Stills
கோவையில் மில் முதலாளியின் மகனான விஜய் ஆண்டனி. வெளிநாட்டில் படித்துவிட்டு வருகிறார். கம்பெனியின் நிர்வாகப் போறுப்பை ஏற்றுக் கொள்கிறார். திடீரன ஒரு நாள் அவரது அம்மாவுக்கு ஆலையின் மெஷின் சக்கரத்தில் புடவை சிக்கி விபத்தாகிறது.  கோமாவுக்குப் போய் விடுகிறார்.

எவ்வளவோ மருத்துவ முறையில் முயன்றும் மீள முடியவில்லை.
என்ன செய்வது என தவிக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு சாமியார்’ நீயார் என்பதைக் காட்டாமல்உன் செல்வாக்கு தெரியாமல்  48 நாட்கள் பிச்சை எடுத்து ஜீவனம் செய்து வேண்டுதல் பிரார்த்தனையை முடித்தால் அம்மாவுக்கு குணமாகும்’ என்கிறார்.

கம்பெனி பொறுப்பை நண்பனிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு போவதாகக் கூறிவிட்டுவிட்டு பிச்சைக்காரனாக மாறப் புறப்படுகிறார்.

சென்னை வந்து ஆள் அடையாளம் எல்லாம்  மாறி பிச்சைக் காரர்கள் கூட்டத்தில் சேர்ந்து பிச்சைக்காரன் ஆகிறார். இடையில் சந்திக்கும் காதலி, வந்து சேரும் பகை, சொத்தை அபகரிக்க முயலும் சித்தப்பா இவர்களை எல்லாம் தாண்டி வேண்டுதலை- விரதத்தை முடிக்கிறாரா என்பதே மீதிக்கதை.

தமிழ்ச் சினிமாவில் இது வித்தியாசமான கதைதான். இயக்குநர் சசி படத்துக்குப் படம் முதிர்ச்சிகாட்டுகிறா; மேம்பட்டு வருகிறார். பிச்சைக்காரனாக விஜய் ஆண்டனி வாழும் அந்த 48 நாட்களிலும் நடக்கும் சம்பவங்கள் தேர்ந்த திரைக்கதைக்கு சான்றுகள்.

pichaikaran11போகிற போக்கில் காட்சிகளின் மூலம்  எவ்வளவோ உலக விஷயங்களை,தத்துவ உண்மைகளை தெளித்து விட்டுப் போகிறார்இயக்குநர் சசி. பிச்சைக்காரர்களின் அகவுலகத்தில் நம்மை உலவவிடுகிறார். இப்படத்தைப் பார்த்தவர்கள் இனி பிச்சை போடா விட்டாலும் பிச்சைக்காரர்களை ஏளனம் செய்ய மாட்டோம்.

விஜய் ஆண்டனி பாத்திரத்தில் சரியாகப் பொருந்தி அசத்தியுள்ளார். பிச்சைக் காரன் என்று  சொல்லத் தயங்கும் இடங்கள் தொடங்கி  சண்டைக்காட்சிகள் வரை முத்திரை பதிக்கிறார். நாயகி சாத்னா டைட்டஸ் நல்ல தேர்வு. துறுதுறு தோற்றம் .நடிக்கவும் செய்துள்ளார்.நல்லகதை தனக்கான எல்லாவற்றையும் தேடிக் கொள்ளும் அந்த வரம் இப்படத்துக்கு எல்லாம் வகையிலும் வாய்த்து இருக்கிறது.எல்லாமும் அமைந்திருக்கிறது.

இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தியாக பயணித்து உள்ளன.  நடிப்பைப் போலவே பாடல்களிலும் பின்னணி இசையிலும் இசையமைப்பாளர்
விஜய் ஆண்டனியும் குறை வைக்க வில்லை.

தாய்ப்பாசம் குறைந்துவரும் இக்காலக் கட்டத்தில் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையான படம்  இது .கதையின் நல்ல நோக்கத்துக்காகச் சொல்லப்பட்டுள்ளதால் கதையில் மிகச்சிறு குறைகளை புறம் தள்ளிவிட்டு படத்தை ரசிக்கலாம்.

ஒரு துளி ஆபாசம், முகம் சுழிக்கும் காட்சிகள் எதுவுமின்றி ஆரோக்கியமான, விறுவிறுப்பான படத்தைத் தந்துள்ள சசியை முதுகு வலிக்கும் வரை தட்டிக் கொடுத்துப் பாராட்டலாம்.கடைசியாக ஒன்று, பாடத்தைப் பாருங்கள்,தவற விடாதீர்கள்.இப்படி எப்போதாவதுதான் விமர்சனம் எழுத முடிகிறது.