பிரசாந்த் படத்திற்கு பாட்டு பாடிய சிம்பு!

saahasam-simbuதற்போது ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிற  படம்’சாஹசம்’ .பிரசாந்த் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்துள்ளது.

தமன் இசையில் 5 பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதில் ‘தேசி தேசி தேசி கேர்ள்…’ எனத் தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார். ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து இப்பாடலை பாடியுள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தில் லட்சுமி மேனன், அனிருத், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங், அர்ஜித் சிங், ஆண்ட்ரியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். தேசி கேர்ள் பாடலை பாடியதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த பாடகர்கள் பாடியுள்ள சாஹசம் படத்தில் சிம்புவும் இணைந்திருக்கிறார்.

சிம்பு பாடியதோடு சாஹசம் படத்தின் அனைத்து பாடல்களின் பதிவும் நிறைவேறியிருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். சாஹசம் படத்தில் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் தோன்றி சாஹசம் படத்தின் பாடல்களை நேரில் பாடவுள்ளார்கள்.

இசை பிரியர்களுக்கு அமுதமாய் அமையவுள்ள சாஹசம் படத்தின் பாடல்கள் வெகு விரைவில் வெளிவந்து எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்யும் என்று தியாகராஜன் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்திற்கும் சிம்பு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பாடல்கள்  வெளியீட்டுவிழாவை வெகு விரைவில் மலேசியா,சிங்கப்பூர் போன்ற  ஒரு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்