பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்:சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

danush222பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குநர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் நடிக்கிறார்.

இப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் உருவாகிறது.

மூன்றாம் பிறை, கிழக்குவாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற அனைவராலும் பாராட்டப்பட்ட  மத்திய மாநில விருதுகளை அள்ளிய படங்களை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தற்போது மைனா, கும்கி, கயல் போன்ற படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குநர் பிரபு சாலமன் இயக்க, தனது ஜனரஞ்சகமான நடிப்பின் மூலம் பெரும்பான்மையான ரசிகர்களையும் ஈர்த்து தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன்.

இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபுசாலமன் – டி.இமான்  மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வி. மகேந்திரன், படத்தொகுப்பு – தாஸ் (டான் மேக்ஸ்), நிர்வாக தயாரிப்பு – ராகுல்.

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறதுtgt1

 

Pin It

Comments are closed.