பிறந்தநாள் கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ்!

gvp-bdகோடம்பாக்கத்தின் ‘செல்லக்குட்டி’ GV பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். GV பிரகாஷ் அறிமுகமான ‘டார்லிங்’ திரைப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகதகர்களுக்கு இவ்வாண்டு நல்ல ஆரம்பத்தை தந்தது. மேலும் பேய் படங்களுக்கு தனி ஒரு இடத்தையும் பெற்றுத்தந்தது.

GV பிரகாஷ் குமார் தற்போது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இறுதி கட்ட வேலைகளில் இறங்கியுள்ளார். பல இளம் இயக்குநர்கள் எழுதும்போது இளம் கதாநாயகன் என்றால் GV பிரகாஷ் குமாரை முன் நிறுத்துவதும் இயல்பாகியுள்ளது.

பல்வேறு வாழ்த்துக்களுக்கு இடையே, 2015ல் கதாநாயகனாக அவதரித்துள்ள GV பிரகாஷ் குமாரை வரவேற்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும்  கலைபுலி S தாணு அவர்களின் தலைமையில் குழுமிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று அவரது பிறந்த நாளையொட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.