பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் !

film-news-anandanrsதமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படுபவர் ‘கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தன்.

திரைத்தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அவர்,
தென்னிந்திய சினிமாவின் நடமாடும் அகராதியாக, கண்முன் நிற்கும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறார்.எப்போது யார் கேட்டாலும் திரைத் தகவல்களைக் கொட்டுபவர் .திரையுலகில் மக்கள் தொடர்பாளர் என்கிற பணியை பிரபலப்படுத்தியவர்.தென்னிந்தியாவிலேயே இந்தப்பணியை,தொழில்ரீதியாகவும் முதலில் தொடங்கியவர் அவர்தான்.நம் தளத்துக்காக அவரைச் சந்தித்தபோது உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அந்த 88 வயது இளைஞர்.1931 முதல் இன்று வரை சினிமா தகவல்கள் இவருக்குள் அடக்கம். அவரைச் சந்தித்த போது அண்மைத் தகவல்களைக்கூறி தான் இன்னும் சரியாக இருப்பதை உணர்த்துகிறார்.
பழங்காலத்தின் தகவல்கள் அந்தந்த ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூறுவதைப் பார்த்தால்…
பழைய நினைவேடுகளைத் தூசு படியாமல் இன்றும் தனக்குள் வைத்திருப்பது தெரிகிறது.

இனி பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் பேசலாம். நாளை முதல் தன் அனுபவ அலைகளை உங்கள் முன் தவழ விடுகிறார்.

Pin It

Comments are closed.