புதிய ரத்தம் ,புதிய முயற்சி ‘துருவங்கள் பதினாறு’படத்துக்கு குஷ்பூ பாராட்டு!

kushboo1புதிய ரத்தம் ,புதிய முயற்சி என்று ‘துருவங்கள் பதினாறு’  படம் பற்றி குஷ்பூ பாராட்டியுள்ளார்.
‘துருவங்கள் பதினாறு’  படம் பார்த்து விட்டு குஷ்பூ பேசும்போது ”  படம் பார்த்தேன். இது புதிய ரத்தம் , புதிய இளைஞர்கள்,புதிய முயற்சி.வழக்கமான ஒரு படமாக , மசாலா படமாக, சாதாரண வணிகப் படமாக எடுக்காமல்  பார்ப்பவர்கள் சிந்தனையைத் தூண்டுகிற மாதிரி புத்திசாலித்தனமாக எடுத்துள்ளார்கள்.

புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் செய்துள்ளது பிரில்லியண்ட் ஜாப். படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுடனும் நம்மை இணைத்து சிந்திக்க வைத்துள்ளார்.இதில் என் நண்பர் ரகுமான் நடித்துள்ளது மகிழ்ச்சி. அவருக்கு என் வாழ்த்து. இந்தப் படத்தில் எல்லாமும் இருக்கிறது.  படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள் ” இவ்வாறு நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.