‘புறம்போக்கு’ படத்தின் இசைப்போக்கு தொலைநோக்கு: இசையமைப்பாளர் வர்ஷன்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ மே 1ம் தேதி வெளியாக உள்ளது. தனது படங்களில் புதுமையை தரும் இயக்குநர் ஜனநாதன் இப்படத்தில் இளம் இசையமைப்பாளர் வர்ஷன்  என்பவரை அறிமுகப்படுத்துகிறார்.
varshan2
இப்படத்திற்கு இசையமைத்தது குறித்து இசையமைப்பாளர் வர்ஷன் கூறியபோது:

”படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து எதிர்பார்ப்பையும் தூண்டியது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேறும் வகையில் இசையமைப்பது எனக்கு பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு தேசிய விருது பெற்ற இயக்குநரின் திரைப்படத்திற்கோ, யுடிவி போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலோ வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை முழு இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார்.

நான் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்திய பாரம்பரிய இசையை சென்னை இசைக்  கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் அவர்களுக்கு பிடித்திருந்தது. எனக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில் வாய்ப்பளித்தார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், ஜனநாதனின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நினைவில் வைத்துக்கொண்டு இசையமைத்தேன். படத்தின் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது.

ஒரு இயக்குநரிடம் வேலை புரிவது மிகவும் புதிதாக இருந்தது. ஒரு தனித்த இசைக் கலைஞனாய் வேலை செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு இசையமைப்பாளர் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும். ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் என்னை ஒரு இசையமைப்பாளராய் மேலும் மெருகேற்றியது. படத்தின் இசை 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”. இவ்வாறு இசையமைப்பாளர் வர்ஷன்கூறினார்.ஆக   ‘புறம்போக்கு’  படத்தின் இசைப்போக்கு தொலைநோக்குடன் இருக்கும் என்கிறார்  வர்ஷன்.வாழ்த்துகள்!