‘பூமி’விமர்சனம்

பூமி படத்தின் ஹீரோவான பூமிநாதனை(ஜெயம் ரவி) அறிமுகம் செய்யும்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து தான் நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானி என்று கூறி, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மிஷன் பற்றி விளக்குகிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முன்பு அவர் தன் அம்மாவுடன்(சரண்யா பொன்வண்ணன்) தமிழகத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார். ஒரு மாத விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு வருகிற அவர்  அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, இங்கேயே தங்கிவிட முடிவுசெய்கிறார். ஊருக்கு வந்த இடத்தில் பணத்தாசை பிடித்த கார்பரேட் ஆட்களால் விவசாயிகள் படம் கஷ்டம் குறித்து தெரிந்து கொள்கிறார் . முதலில் விவசாயியாக மாறி, போராடி தன் சொந்த ஊரை சரிசெய்ய விரும்புகிறார்.மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொடுத்து இந்த பூமியை அழிக்க நினைக்கும் கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்க ஆரம்பிக்கிறார். அதற்கு பின் நடப்பதுதான் மீதிக்கதை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையில் படம் துவங்குகிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல பிரச்சனையை விரிவாக அணுகும் முயற்சியில் எங்கெங்கோ செல்கிறது படம்.

முதல் 15 நிமிடங்களுக்குள் இரண்டு பாடல்கள். இதற்குப் பிறகு விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுக்கிறார் இயக்குநர். உலகத்தையே 13 குடும்பங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன; இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என்பதுபோன்ற தகவல்களுடன் படம் நகர ஆரம்பிக்கிறது.

சமீப காலமாக பல இயக்குநர்களும் விவசாயம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் பூமி படத்தில் விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர்.ரோமியோ ஜூலியட், போகன் திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மணின் அடுத்த படம். ஜெயம் ரவிக்கு இது 25வது படம். லக்ஷ்மண், ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.படத்தில் ஜெயம் ரவி தோற்றத்திலும் நடிப்பிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்

படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இல்லை. சக்தி(நிதி அகர்வால்) தான் வில்லன் ரிச்சர்ட் (ரோனித் ராய்)  நடிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். 

விவசாயிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை எடுத்துரைப்பதுடன்,அவர்களுக்கு எதிராக சதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்தும் படம் விரிவாக எடுத்துரைத்துள்ளது .வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடன் வாங்கி துன்பத்திற்குள்ளாகும் ஒரு நிஜ பிரச்சினையுடன் தொடங்கும் பூமி திரைப்படத்தில் இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன .

ஹீரோ, வில்லன் இடையேயான மோதல் சுவாரஸ்யம் . அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. வில்லன் ஏற்படுத்தும் எந்த பிரச்சனையையும் ஹீரோ அடுத்த காட்சியிலேயே சரி செய்வது போன்று காட்டியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண்.

உதாரணமாக, ஹீரோ விளைவித்த பொருட்கள் நாசமாகும் வகையில் அவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் லாரி வேலைநிறுத்தத்தை ஏற்படுத்துகிறார் வில்லன். உடனே விளை பொருட்களை எடுத்துச் செல்ல மாற்று வழி கண்டுபிடித்துவிடுகிறார் ஹீரோ.  கதைப் போக்கில் நம்பமுடியாத சில  சித்தரிப்புகள் இருந்தாலும் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும் படம் செல்லும் நோக்கத்தை நாம் மதித்தாக வேண்டும்.விவசாயம் வருமான உத்தரவாதம் இல்லாத தொழில் என்கிற அவநம்பிக்கை பரவியுள்ள இந்த நேரத்தில் விவசாயத்தைப் புத்திசாலித்தனமாகச் செய்தால் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கை விதைக்கிறது இப்படம்.விவசாயம் தொழில் மீது புதிய கவனம் குவிய வைத்துள்ளது ,சிந்திக்க வைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஒரு நல்ல நோக்கத்திற்காக மட்டும் இந்த படத்தைப் பார்க்கலாம் பாராட்டலாம்.