‘ரெமோ’வில் பெண்வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன் !

Remo11அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ரெமோ’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வெளியீடு விழா நேற்று சென்னை தாஜ்கொரமண்டல் ஓட்டலில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத்,  இயக்குநர்கள்  ஷங்கர்,  பொன்ராம்,மோகன்ராஜா,ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் கலந்து கொண்டார்கள்.விழாவில் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரையும் முறையாக  ஒவ்வொருவராக மேடையேற்றிக் கௌரவம் செய்தனர்.

மேலும், இந்த படத்தின் ஒலிப்பதிவாளராக ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி இணைந்துள்ளார். மிக அதிக பொருட் செலவில் 24AM Studios சார்பில் ஆர் டி ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் பர்ஸ்ட் லுக்கினை இயக்குநர் ஷங்கர் விழாவில் அறிமுகப்படுத்தினார். இந்த பர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் ஒரு பெண் வேடத்தில் இருக்கிறார்.படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் கூட அந்த கேரக்டரைப்பார்த்து பொறாமைப்பட்டதாகக் கூறுகிறார். இந்த வேடம் அவரது ரசிகர்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது.