பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..!

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் SIFWA இணையதளம் மற்றும் “திரையாள்” என்ற காலாண்டு பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது :- 

 சாஸ்திரமும் , சடங்கும் , பண்பாடும் , கலாச்சாரமும் பெண்களை அடிமைகளாக தான் வைத்துள்ளது. இவற்றை பாதுகாக்க தான் மதம் மற்றும் ஜாதி போன்ற விஷயங்கள் இங்கே உள்ளது. இவற்றிலிருந்து பெண்கள் வீடுபெற வேண்டுமென்றால் பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள் என்பது தெரிந்தால் தான் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியும் .

விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது :-

 பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள் அவர்களின் வெளிப்பாடாய் தான் இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.

இந்த சங்கம் நிச்சயமா ரொம்ப வீரியமா செயல் படனும் ஏன்னா பெண்கள் மீது பாலியல் சுரண்டல் போன்றதை தடுக்க வேண்டும்.

சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி வந்த விமர்சனம் என்னன்னா அவள் ஒழுங்கா ஆடை அணியவில்லை என்கிறார்கள் குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாங்க குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கா,? இல்லை அதன் நடத்தை காரணமாக இருக்கா. பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணம் என்று சொல்றது ரொம்ப இயல்பா ஏற்றுக்கொள்ளும் வடிவமாகிவிட்டது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்தை உடைக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும் அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசியது :-

எங்கள் பயணத்தில் எப்பவுமே ஒரு பெண் இருந்திருக்காங்க. கௌசிகா, சீதா யாமினி இவங்க எப்பவுமே தனித்துவம் வாய்ந்தவங்களா தான் இருப்பாங்க.என்னால முடிஞ்ச அனைத்து உதவியும் நான் செய்வேன். நான் ஏற்கனவே அவர்களிடம் உறுதி அளித்துவிட்டேன். அதேபோல் அவங்க கிட்ட நான் ஏற்கனவே நீங்க நூறு பேரை பார்த்திருந்திங்கனா அதில் இரண்டு பேர் கண்டிப்பா நிராகரிப்பாங்க அதனால அதை காதில் வாங்காதீங்க மிச்சம் இருக்குற தொண்ணுத்தி எட்டு பேர் சொன்ன நல்லதை மட்டும் எடுத்துக்கோங்க அப்படின்னு சொல்லிருக்கேன். இந்த சங்கம் பெரிய அளவுல போகனும் மாற்றத்தை உண்டாக்கும் .

 

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் : வைஷாலி சுப்ரமணியன்(தலைவர் ), ஏஞ்சல் சாம்ராஜ் (துணைத்தலைவர் ) , ஈஸ்வரி.V.P (பொது செயலாளர் ) , மீனா மருதரசி.S (துணை செயலாளர் ) , கீதா.S (பொருளாளர் ).

Pin It

Comments are closed.