‘பென்சில்’ விமர்சனம்

pencil-movieஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, ஊர்வசி  நடித்துள்ளனர் .டி.பி.கஜேந்திரன். வி.டி.வி.கணேஷ் அபிஷேக், சுஜா வாருணி, மிர்ச்சி ஷா, திருமுருகன் ஆகியோரும் நடித்துள்ளனர். மனதில் பதிகின்றனர்.

ஒரு பள்ளியில் பென்சில் மூலம் குத்தி கொலை நடக்கிறது அதனைத் தொடர்ந்து பின்னோக்கிச் செல்கிறது கதை.

ஜி.வி.பிரகாஷ், ஷாரிக், ஸ்ரீதிவ்யா ஒரே வகுப்பு மாணவர்கள். சூப்பர் ஸ்டாரின் மகன் ஷாரிக். அடாவடியாக இருக்கிறான். பாத்ரூமில் கேமரா வைத்து படமெடுத்து சம்பந்தப்பட்ட மாணவியை வளைத்து காரியம் சாதிப்பது அவனது வழக்கம்.

அப்படி பலபேர் பாதிக்கப் படுகின்றனர். ஒரு நாள் அவன் கொலை செய்யப் படுகிறான். யார் செய்தது என்பதை ஊகிக்க  முடியாத படி சஸ்பென்சை வளரவிட்டு திடுக் முடிவு கொடுப்பதே  கதை.

ஜி.வி.பிரகாஷ், , ஸ்ரீதிவ்யா இருவரும் பள்ளி மாணவர்களாக அச்சு அசலாக வருகிறார்கள் .வில்லன் ஷாரிக்  நல்ல வரவு.டி.பி.கஜேந்திரன் அண்ட் கோவின் அப்பா வித்தனமான செய்கைகள் சிரிக்க வைக்கின்றன.

பள்ளிப் பின்னணியில் முழுப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் அடுக்கடுக்காக முடிச்சுகள் போட்டு கடைசியில் அவிழ்ப்பது இயக்குநரின் திரைக்கதை திறமைக்கு வெற்றி.

கல்வியை வியாபாரமாக்காதே என்று கருத்தும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் போரடிக்கவில்லை.நேர்த்தியான ஒளிப்பதிவு இசை என படம் முதிர்ச்சியான வகையில் உருவாக்கி யுள்ளார் இயக்குநர் மணி நாகராஜ்.