பொங்கல் திருநாளை கொண்டாடிய “முடிஞ்சா இவன புடி” திரைப்பட குழுவினர்

mip11gpராம்பாபு புரொடக்ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் k.s.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “முடிஞ்சா இவன புடி” பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் ஊட்டி, வேலூர் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது.

பொங்கல் திருநாளினை, படப்பிடிப்பின் இடையே வெகு விமரிசையாக கொண்டாடினர். இதில் இயக்குநர் k.s.ரவிக்குமார், தயாரிப்பாளர் சூரப்ப பாபு, ஹீரோ கிச்சா சுதீப், நடிகர் ரவிசங்கர், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம், ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு k.s.ரவிக்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக நிறைவடைந்தது இரண்டு பாடல்களின் படபிடிப்பு அடுத்த மாதம் நடைபெறும். அடுத்த வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் இதர வேலைகள் துவங்கும். இத்திரைப்படம்  ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வரும்.