‘போக்கிரி மன்னன்’ விமர்சனம்

Pokkiri Mannan Movie Stills (12)நடன இயக்குநர் ஸ்ரீதர் நாயகனாக நடித்துள்ள படம். ஸ்பூர்த்தி நாயகி, ராகவ்மாதேஷ் இயக்கியுள்ளார்.

ஏமாந்தவர்களிடம் சில்லறை பார்த்து நண்பர்களுடன் குடி கும்மாளம், அரட்டை என்று வேலை வெட்டியில்லாத ஸ்ரீதர், போலி கலப்பட மதுவுக்கு எதிராக போராடும் நாயகனாக மாறுவதுதான் கதை.

பொறுப்பில்லாத ஸ்ரீதர் முதலில் காதலி ஸ்பூர்த்தியின் அன்புக் கட்டளையாக குடியை விடுகிறார். கலப்பட மதுவால் ஸ்ரீதர் தன் நண்பன், தன் தங்கையின் மணமகன் ஆகியோரை இழக்கிறார் அதன்பிறகு கலப்பட மதுவுக்கு எதிராக மாறுகிறார்.

போக்கிரி, சேட்டை என்று ஸ்ரீதர் செய்யும் குறும்புகள் பல இடங்களில் கலகலப்பு சில இடங்களில் வெறுப்பு .அதிலும் செருப்பு சுமந்து அவர் போடும் ஆட்டம் செம வெறுப்பு.துபாய் ரிடர்னாக வரும் சிங்கம்புலியிடம் காசு கறப்பதும் அப்படித்தான் சிரிப்பு கலந்த வெறுப்பு .
நாயகி  ஸ்பூர்த்தி சராசரி ரசிகனை மட்டும் இளமை காட்டி பூர்த்தி செய்துள்ளார்.

போக்கிரியாகத் திரிகிற ஒருவன் குடிக்கு எதிராக கலப்பட மதுவுக்கு எதிராக வெகுண்டு எழுந்து கலப்படமது தாதா ரமேஷ் ரெட்டியை தேடி பழிதீர்ப்பது என்கிற வகையில் நாயகனை மன்னனாக்க முயன்றிருக்கிறார். ஆனால் அதில் வெற்றிபெற முடியாமல் திணறியிருக்கிறார் இயக்குநர்