மகளிர் தினத்தையொட்டி மாபெரும் மராத்தான் போட்டி!

marathan1ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்ற முண்டாசுக் கவிஞனின் வரிகளுக்கு ஏற்ப இன்றைய நவீன காலகட்டத்தில்

அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகின்றனர். மகளிரின் மாண்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும்மார்ச் மாதம் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான மகளிர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட த் திட்டமிட்டுள்ளது சீக் அறக்கட்டளை. தாய், மனைவி,மகள், தோழி என  நம் வாழ்வோடு கலந்து விட்ட பெண்குலத்தை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் மராத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதுசீக் அறக்கட்டளை.

நம் வாழ்வில் ஏதேனும் ஒரு கணத்தில் ஏதோ ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று நினைத்து இருப்போம். ஆனால் அதற்கானதருணம் கிடைக்காமல் போய் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒரு அற்புத தருணத்தை ஆண்களுக்கு ஏற்படுத்தி தருகிறது சீக் அறக்கட்டளை. மதிக்கப்படும்மகளிருக்கு தங்கள் அன்பை, மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு தான் இந்த மராத்தான் போட்டி என்கிறார் இதன் ஏற்பட்டாளரும் சீக் அறக்கட்டளையின்நிறுவனருமான விமலா பிரிட்டோ மற்றும் ஐஎன்டிஇவி குழுமத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோ.

சீக் அறக்கட்டளை 3ஏற்பாடு செய்துள்ள இந்த மராத்தான் போட்டி குறித்த அறிவிப்பை  வெளியிட்டார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.

மார்ச் மாதம் 8-ந் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் இந்த சிறப்பு மராத்தான் பந்தயம் நடைபெறும் என்று அவர் கூறினார். அப்போது  ராதிகாவும் உடன் இருந்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ராணிமேரி மகளிர் கல்லூரியில் ஆரம்பிக்கும் இந்த மராத்தான் ஓட்டப் பந்தயம், அண்ணா சதுக்கம் வரை சென்று மீண்டும் ராணிமேரிக்கல்லூரி வந்து நிறைவடையும். ஒட்டுமொத்த பந்தய தூரம் 6 கிலோ மீட்டர் ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அட்டகாச பரிசுகளும் காத்திருக்கின்றன.

இந்த மராத்தான் போட்டியின் சிறப்பு விருந்தினராக பிரபல சைக்கிள் பந்தய வீரரும், ஓட்டப்பந்தய வீரருமான நெவிலி பிலிமோரியா பங்கேற்க உள்ளார். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்

சென்னையில் போட்டி நடைபெறும் அதே தினத்தில் பெங்களுரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஒரே சமயத்தில் 3 நகரங்களில் இந்த போட்டிநடைபெறுவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் மாண்பை போற்றும் விதமாக இந்த மராத்தான் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சீக் அறக்கட்டளை பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் கிராமத்தை தத்தெடுத்துள்ள இந்த அறக்கட்டளை அந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

வறிய நிலையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது கல்வி மேம்பாட்டிற்காகவும் சீக் அறக்கட்டளை பாடுபட்டு வருகிறது.