மகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘ செல்வந்தன் ‘

selvandhan4மைத்ரி மூவி மேக்கர்ஸ், M .B.எண்டர்டைன்மென்ட்ஸ் வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “ செல்வந்தன் “

மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன்  நடிக்கிறார். தெலுங்கில்  “ ஸ்ரீ மந்த்துடு “ என்ற பெயரில் மிக பிரமாண்டமான முறையில் சுமார் 70  கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப் பட்ட  இந்த படம் வெளியாக இருந்த நேரத்தில் பாகுபலி படத்தின் வெளி’யீட்டை ஒட்டி இந்த படத்தின் வெளியீட்டை மகேஷ்பாபுவே ஒத்திவைத்து ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் வெளியிட உள்ளனர்.

ஜெகபதி பாபு, சுகன்யா, மாஸ்கோவின் காவேரி படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரன், சனம் ஷெட்டி , நிகிதாஅணில், சம்பத், சுப்புராஜ், ராஜேந்திரபிரசாத், சித்தாரா, துளசி, முகேஷ் ரிஷி, பாண்டியநாடு ஹரீஷ், சனா, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –     மதி , இசை  –     தேவிஸ்ரீ பிரசாத் ,    பாடல்கள்    –    விவேகா, ஏக்நாத், அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம்,   கலாராஜன்.                          கலை  –  எ.எஸ்.பிரகாஷ் ,  நடனம்   –   ராஜுசுந்தரம், தினேஷ், பாஸ்கோ சீசர்                  ஸ்டன்ட்  –   அனல்அரசு ,  எடிட்டிங்   –   கே.வேங்கடேஸ்ராவ்                                                      இணை இயக்கம்           –      பி.வி.வி.சோமராஜ், துளசி அஞ்சன்.                    இயக்கம்   –        கொரட்டாலா சிவா. இவர் பிரபாஸ் – அனுஷ்கா, சத்யராஜ் நடித்து மிர்ச்சி என்ற தெலுங்கு படத்தை இயக்கி வசூல் சாதனை படைத்தவர்.

தயாரிப்பு     –   பத்ரகாளி பிரசாத். இணைத்தயாரிப்பு – வெங்கட்ராவ்

வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் ARK.ராஜராஜா. இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.  இவரிடம் படத்தைப் பற்றி கேட்ட போது….   மகேஷ்பாபு படம் என்றாலே ஆக்ஷனுக்கு பேர்போனது அது இந்த படத்திலும் இருக்கும். பிரமாண்டமான முறையில் ஐந்து சண்டைகாட்சிகள், ஆறு பாடல் காட்சிகள் இடம்பெறுகின்றன.

இந்த படத்தில் நாயகன் மகேஷ் பாபு உபயோக படுத்தும் ஒரு சைக்கிள் 3.75 லட்சம் செலவில் வெளிநாட்டில்  பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டு இறக்குமதி செய்யப்பட்டது.

Pin It

Comments are closed.