மனிதனால் காடு அழிக்கப்பட்ட அரசியலைப் பேசும் படம்’காடு’

Kaadu Movie Stills (7)இதுவரை பல படங்களில் காடு காட்டப்பட்டுள்ளது.படத்தில் காடு இடம் பெறுகிறது என்றால் அந்தப்படம்  கௌபாய் ஸ்டைலில் இருக்கும். அல்லது ஜங்கிள் மூவி.. அதாவது காட்டில் மாட்டிக் கொண்ட நாயகன் நாயகி, தனியே சிக்கிக் கொண்ட பெண், காட்டில் பதுங்கியுள்ள வில்லன்கள், தீவிரவாதிகள். என்றே காட்டப் பட்டிருக்கும். பெரும்பாலும் காட்டுச்சூழலில் நாயகியை கவர்ச்சி காட்டவே பயன்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் காடு இதுவரை பின்னணியில் இருந்தது போக, காட்டையே பாத்திரமாக்கி ஒரு காட்டின் கதை என்பது போல உருவாகியுள்ள படமே ‘காடு’. மனிதனால் காடு அழிக்கப்பட்ட அரசியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.

இதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ள விதார்த் இரண்டாவது நாயகன்தான். காடுதான் முதல் நாயகன்.சமுத்திரக்கனி முக்கிய பாத்திரத்தில்  நடித்துள்ளார்.

ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கியுள்ளார்.  நேரு நகர் நந்து தயாரித்துள்ளார். இசை. கே.,பாடல்கள். யுகபாரதி. இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பில் நாம் புரிந்து கொண்டது.

தரமான கதையும் சமூக பிரக்ஞையுள்ள இயக்குநரும் அமைந்துவிட்டால் தோள் கொடுக்க பலரும் முன்வருவர். அப்படி  இப்படத்துக்கு தானே எல்லாமுமாக அமைந்து படக்குழு உருவாகி ‘காடு’ வளர்த்துள்ளனர். வாழ்த்துக்கள்.
Vidharth in Kaadu Movie Posters