மனித நேயம் மிக்க மனிதர்ஆர்யா :சான்றிதழ் கொடுக்கும் தீபா சன்னதி

deepa1தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்றால், இரண்டாயிரத்தில்  நயன்தாரா என்றால் ,தற்போது ‘யட்சன்’ படத்தின் நாயகி  தீபா சன்னதி எனலாம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்து குல்பி இவர்.மாடல் அழகியான தீபா சன்னதி பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர். நகைகளை வடிவமைக்கும் கல்வியை படித்து உள்ள இவர் கவிதைகளை எழுதுவதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர். கல்லூரியில்  படிக்கும் போது  கலந்து கொண்ட  நாடக அனுபவமும் விளம்பர நிகழ்சிகளில் கலந்து கொண்டு பங்கேற்ற அனுபவமும் தன்னுடைய நடிப்பு பணிக்கு மிகவும் உதுவுகிறது என்கிறார்.

DSC07169” தமிழ்த் திரை உலகில் எனக்கென்று தனி இடம் பிடிப்பதே என் லட்சியம்.இங்கு கிடைக்க பெறும் அருமையான கதைகள், திறமையான இயக்குநர்கள், திரை உலகினருக்கு கிடைக்கும் மதிப்பு ஆகியவை உலகில் வேறு எங்கும் கிட்டுமா தெரியாது. என் முதல் படமான ‘எனக்குள் ஒருவன்’  படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளி வரத் தயாராக  உள்ளது.இது கன்னடத்தில் ஏற்கெனவே நான் நடித்து வெளிவந்த ‘லூசியா’ திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும்.

இந்த படத்தில் சித்தார்த்துக்கு இணையாக நடிக்கிறேன். எனது அடுத்த படமான ‘யட்சன்’ படத்தில் எனக்கு பிரமாதமான கதாபாத்திரம்.இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.அவர் இருக்கும் போது படப்பிடிப்பு உற்சாகமாக இருக்கும். அவர் ஒரு நல்ல மனித நேயம் மிக்க மனிதராவார். என்னுடைய சக நட்சத்திரங்களான சுவாதி மற்றும் கிருஷ்ணா ஆகியோரை மறக்கவே முடியாது.விஷ்ணுவர்தனை போல் ஒரு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பது பெரும் பாக்கியம் யட்சன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது,இந்த படம் மூலம் நானும் தமிழில் பெரிய வலம் வருவேன்’ ‘ என்று புன்னகையோடு விடை பெற்றார்.  பொண்ணுக்கு நல்லா பேசத்தெரியுது.பொழச்சுக்கும்

.-கபாலி
deepa1