மலேசியாவிலிருந்து தமிழுக்கு வரும் புதுப் பாடகர்!

mdr-amதமிழ் சினிமாவில் சராசரியாக ஐந்து  வருடங்களுக்கு மேலாக  தொடரும் போக்காக  இருந்து வருகிறது பேய்க்கதை கொண்ட படங்கள். “அபூர்வமகான்” படத்தை முடித்துள்ள கே.ஆர். மணிமுத்து அதே ட்ரன்ட் வரிசையில் இடம்பெறும் வகையில் “எலும்பு கூடு” படத்தை அறிவித்து விட்டார். இசையமைப்பாளர் தஷியின் வாரிசான ரெங்கராஜ் இப்படத்துக்கு இசையமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளார்.

அவரும் இப்படத்திற்கான பாடலைப் பாடுபவர் வித்தியாச மாடுலேஷன் தரவேண்டும்
என விரும்பி இயக்குநரிடம் தெரிவிக்க, எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான குரலுக்காக  மலேசியாவிலிருந்து ஹரேகிருஷ்ணாவைத் தனது இசையில் பாட வைத்துள்ளார் இந்த புது இசையமைப்பாளர்.

சேனல் ஆர் பைவ் இப்படத்தைத்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறது.