மழைவெள்ளமும் இசைவெள்ளமும் : ‘சென்னையில் திருவையாறு’ மூலம் உதவி!

ct-pm-3rsலஷ்மன் ஸ்ருதியின் சென்னையில்திருவையாறு 11ஆம் ஆண்டு இசைதிருவிழா வருடாவருடம்  கோலகலமாகத் தொடங்கி அனைத்து கர்நாடக இசை ரசிகர்களைக் கவர்ந்த லஷ்மன்ஸ்ருதியின் சென்னையில்திருவையாறு தனது 11ஆம்ஆண்டு ‘சென்னையில்திருவையாறு’ இசைத் திருவிழாவை இந்தமாதம் 18ம்தேதி தொடங்கவுள்ளது. இவ்விழாவைப் பிரபலநடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.

இவ்வாண்டு நடக்கவுள்ள இந்த இசைத்திருவிழாவின் சிறப்பம்சங்களைப் பற்றி விவரிக்க இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பல அம்சங்கள் பற்றி விவரித்த இந்தச் சந்திப்பில் கர்நாடக இசைஜாம்பவான் கள்கலந்துகொண்டனர்.

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் நிவாரணத்தொகைகளை கர்நாடகஇசைக் கலைஞர்கள் அறிவித்தனர்.

நடனக்கலைஞர் மற்றும் பிரபல நடிகை ஷோபனா 1 லட்சமும், கர்நாடக இசைக்கலைஞர் கேஎன் .சசிகிரன் 1 லட்சமும், கர்நாட்டிக்சங்கம்சார்பாக 1 லட்சமும், மற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து 3 லட்சமும் வழங்கினர்.

மேலும் சென்னையில் திருவையாறு இசைவிழாவின் மற்றுமொரு சிறப்பாககருதப்படும் உணவுத்திருவிழாவில் உலகஅதிசங்களி ல்ஒன்றாககருதப்படும் ஈபில்டவரைப் போல் 30 அடிஉயரமான முருங்கைகாய் கோபுரத்தை பிரபல நடிகர் மற்றும்இயக்குநர் பாக்யராஜ் துவங்கி வைக்கிறார்.

இந்த நிவாரணத்தொகை ரோட்டரிஇண்டர்நேஷனல் டிஸ்டிர்க்ட் – 3230 மூலம்வழங்கப்படும்என்றுகூறினர்.