‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை நேரத்தில் வெளியாகிறது!

malainerathu-2பீப் டோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கும் படம் – மாலை நேரத்து மயக்கம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் 110க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் கோலா பாஸ்கர். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, 3 உட்பட பல படங்களில் பணியாற்றி உள்ள கோலா பாஸ்கர், முதன்முறையாக தயாரிக்கும் படம் மாலை நேரத்து மயக்கம்.

இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.
கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
இவர்களுடன் அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை – அம்ரித். உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்தவர் இவர்.
ஒளிப்பதிவு- ஸ்ரீதர் டி.எப்.ட்டி. இவர் ராம்ஜியின் உதவியாளர்.
நடனம் – கல்யாண்
தயாரிப்பு – கோலா பாஸ்கர்
கதை, திரைக்கதை, வசனம் – செல்வராகவன்
இயக்கம் – கீதாஞ்சலி செல்வராகவன்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது – மாலை நேரத்து மயக்கம்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.