மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே விரைவில் வெளியாகும் “ஒரு நாள் இரவில்”

oniஇயக்குநர் விஜய்யின் திங்பிக்ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்து, ஆண்டனி இயக்கத்தில், சத்யராஜ், அணுமோல், யூகிசேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஒரு நாள் இரவில்”.

“நைட் ஷோ” என்று முதலில் பெயரிடப்பட்ட இப்படத்தை பார்ந்த பிரபலங்கள், படம் ஜனரஞ்சகமான முறையில் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எடுக்கபட்டிருப்பதால், இன்னும் ஏதுவான பெயர் படத்திற்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூற, மிகுந்த யோசனைக்கு பிறகு படத்திற்கு “ஒரு நாள் இரவில்” என்று பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

இந்த பெயர் கதைக்கு ஏற்றாற் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக அனைவரும் பாரட்டினர்.

மலையாளத்தில் விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட ”ஷட்டர்” என்னும் திரைப்படத்தின் தமிழாக்கம் தான் “ஒரு நாள் இரவில்” என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள் ஷங்கர், AR.முருகதாஸ், கெளதம்மேனன், விஜய், லிங்குசாமி மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு தொடர்ந்து படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள ஆண்டனி, தற்போது“ஒரு நாள் இரவில்” படம் மூலம்  இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

படத்தை பார்த்த தணிக்கை குழு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, தற்போது “ஒரு நாள் இரவில்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.